- Advertisement -
ஐ.பி.எல்

பும்ராவின் வீடியோவை பாத்தும் முடியல.. உலகின் மற்ற லீக்கை விட ஐபிஎல் ரொம்ப கஷ்டம்.. ஜேக் பேட்டி

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெற்ற 43வது லீக் போட்டியில் மும்பையை 10 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி சிறப்பாக பேட்டிங் செய்து 258 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக ஜேக் பிரேசர்-மெக்குர்க் 84, சாய் ஹோப் 41, ட்ரிஷன் ஸ்டப்ஸ் 48* ரன்கள் எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து சேசிங் செய்த மும்பைக்கு இசான் கிசான் 20, ரோஹித் சர்மா 8, சூரியகுமார் யாதவ் 26 என முக்கிய வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் மிடில் ஆர்டரில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 46, திலக் வர்மா 63, டிம் டேவிட் 37 ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் மும்பை 247/9 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

தரமான ஐபிஎல்:
அந்தளவுக்கு பந்து வீச்சிலும் சிறப்பாக விளையாடி 5வது வெற்றியை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறிய டெல்லி சார்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார், ரசிக் சலாம் தலா 3 விக்கெட் எடுத்தனர். இந்த வெற்றிக்கு 84 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய ஜேக் ப்ரேஷர்-மெக்குர்க் ஆட்டநாயகன் விருதை வென்றார். குறிப்பாக 15 பந்துகளில் 50 ரன்கள் தொட்ட அவர் டெல்லி அணிக்காக அதிவேகமாக அரை சதமடித்த வீரர் என்ற தன்னுடைய சொந்த சாதனையை சமன் செய்தார்.

இந்நிலையில் இப்போட்டியில் தரமான பும்ராவை எதிர்கொள்வதற்காக பழைய வீடியோக்களை பார்த்தும் அடிக்க முடியவில்லை என்று ஜேக் பிரேசர்-மெக்குர்க் கூறியுள்ளார். அத்துடன் உலகின் மற்ற டி20 லீக் தொடர்களை விட ஐபிஎல் மிகவும் போட்டி மிகுந்த தரமான தொடராக இருப்பதாக பாராட்டும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “கொஞ்சம் பதற்றமாக இருந்தது. பும்ராவின் வீடியோக்களை நான் நாள் முழுவதும் பார்த்தேன்”

- Advertisement -

“ஆனால் உண்மையான களத்தில் அனைத்தும் ஜன்னலுக்கு வெளியே செல்கிறது. எனவே நீங்கள் பந்தை பார்த்து விளையாட வேண்டும். அவரைப் போன்ற தரமான பவுலருக்கு எதிராக உங்களை சோதிப்பது மிகவும் நல்லது. இது போன்ற போட்டியின் மேடு பள்ளங்களில் நீங்கள் பயணிக்க வேண்டும். இந்த இன்னிங்ஸ் எனக்கும் என்னுடைய அணிக்கும் நல்ல தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது”

இதையும் படிங்க: 63 ரன்ஸ்.. போராடிய திலக் வர்மா.. மும்பையை வீழ்த்திய டெல்லி.. சிஎஸ்கேவை முந்தி மாஸ் கம்பேக்

“வெளியில் இருக்கும் போது ஐபிஎல் தொடரின் போட்டித்தன்மை பற்றி உங்களுக்கு தெரியாது. இது (ஐபிஎல்) உலகின் மற்ற லீக் தொடர்களை விட மிகவும் அதிக போட்டியை கொண்ட தொடராகும். அதில் நானும் ஒரு அங்கமாக இருப்பது அற்புதமாகும்” என்று கூறினார். அந்த வகையில் வெறும் 22 வயதாகும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜேக் அறிமுக ஐபிஎல் தொடரிலேயே சிறப்பாக விளையாடி வருவது ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

- Advertisement -