IND vs WI : புஜாராவிற்கு பதிலாக யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை தேர்வு செய்தது ஏன்? – பி.சி.சி.ஐ-யின் திட்டம் இதுதானா?

Pujara-and-Jaiswal
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது ஜூலை இரண்டாம் வாரத்தில் துவங்க இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது அங்கு மூன்று விதமான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த மிகப்பெரிய சுற்றுப்பயணத்தில் முதலாவதாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி நேற்று பிசிசிஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Pujara

- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் 16 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த இந்திய அணியில் அனுபவ வீரரான சத்தீஸ்வர் புஜாரா நீக்கப்பட்டுள்ளது சமூக வலைதளத்தில் நேற்றிலிருந்து அதிகம் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. ஏனெனில் இந்திய அணியில் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ள ஒரு மகத்தான வீரரை இப்படி அதிரடியாக அணியிலிருந்து நீக்கி உள்ளது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளையில் புஜாராவிற்கு பதிலாக மூன்றாவது இடத்தில் களமிறங்கி விளையாடப்போவது யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. ஏனெனில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் மூன்றாவது இடத்தில் களமிறங்கி பேட்டிங் செய்யும் திறனுடைய வீரராக ஜெய்ஸ்வாலே இருப்பதினால் அவருக்கே அந்த மூன்றாவது இடத்தில் களம் இறங்க அதிக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் அறிமுகமாக இருப்பது உறுதியாகி உள்ளது.

Yashasvi Jaiswal

ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியில் இடம் பிடித்திருந்த ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அவர் டெஸ்ட் அணியில் இணைந்திருந்தார். இதன் காரணமாக தற்போது மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்த அவருக்கு டெஸ்ட் அணியில் அறிமுக வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

- Advertisement -

இப்படி புஜாராவிற்கு பதிலாக ஜெய்ஸ்வால் விளையாட காரணம் யாதெனில் : இந்திய டெஸ்ட் அணியில் தற்போதைக்கு ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா ஆகிய இருவர் மட்டுமே இடதுகை ஆட்டக்காரர்களாக இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக அவர்கள் பேட்டிங்கில் பின் வரிசையில் மட்டுமே களமிறங்குவதால் டாப் ஆர்டரில் ஒரு இடது கை பேட்ஸ்மேனை இந்திய அணி நிர்வாகம் தேடிவந்தது.

இதையும் படிங்க : 100 டெஸ்ட் போட்டிக்கு மேல விளையாடுன அவரை இப்படியா அசிங்கப்படுத்துவீங்க – ஹர்பஜன் சிங் காட்டம்

இந்நிலையில் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடர் என இரண்டிலும் அசத்தி வந்த 21 வயதான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இளம்வீரர் என்பதனாலும் இடதுகை ஆட்டக்காரர் என்பதனாலும் அவரை புஜாராவின் இடத்திற்கு தேர்வு செய்துள்ளது. இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஜெய்ஸ்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சயம் அந்த மூன்றாவது இடத்தை தக்க வைத்துக் கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement