அடுத்தடுத்த போட்டிகளில் அசத்திய ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் துபே – பி.சி.சி.ஐ கொடுக்கவுள்ள ஆஃபர்

Jaiswal-and-Dube
- Advertisement -

இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ ஆண்டுதோறும் நமது அணியில் விளையாடும் வீரர்களின் செயல்பாடுகளை முன்வைத்து வீரர்களுக்கான வருடாந்திர மத்திய சம்பள ஒப்பந்தத்தை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்திய அணியில் இடம் பெறும் வீரர்களுக்கு தகுதியின் முறையில் சம்பளமும் வழங்கப்படும். அந்த வகையில் ஏ ப்ளஸ் பிரிவில் இடம் பிடிக்கும் வீரர்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் 7 கோடி ரூபாய் வருடாந்திர சம்பளம் வழங்கப்படும்.

அதேபோன்று ஏ பிரிவில் இடம் பெறுபவர்களுக்கு முன்னணி வீரர்களுக்கு ஐந்து கோடி ரூபாயும், பி பிரிவில் இடம்பெறும் வீரர்களுக்கு மூன்று கோடி ரூபாயும், சி பிரிவில் இடம்பெறும் வீரர்களுக்கு ஒரு கோடி என வருடாந்திர சம்பளம் வழங்கப்படும்.

- Advertisement -

அந்த வகையில் நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான மத்திய வருடாந்திர சம்பள ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட இருப்பதாக தெரிகிறது. அந்த ஒப்பந்தத்தில் தற்போதைய ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இளம் வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் துபே ஆகியோருக்கு காண்ட்ராக்ட் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஏனெனில் சமீபகாலமாகவே இந்திய அணியில் இடம் பெற்று தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் சிறப்பாக செயல்பட்ட அவர்கள் இருவருக்கும் பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்த வாய்ப்பை வழங்க உள்ளது.

- Advertisement -

மேலும் அவர்கள் எந்த பிரிவில் இடம்பிடிப்பார்கள் என்பது குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என்றும் அவர்கள் இடம் பிடிக்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர்களுக்கு இந்த ஆண்டு சம்பளமும் வழங்கப்படும் என்கிற செய்தி வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : அதை பற்றில்லாம் தெரியாது.. எங்ககிட்ட திட்டம் ரெடியா இருக்கு.. இங்கிலாந்து தொடர் பற்றி ஸ்ரேயாஸ் பேட்டி

ஏற்கனவே இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட மற்றும் வெளியேறிய வீரர்களை நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக அணியில் தொடர்ச்சியாக விளையாடி வரும் வீரர்களுக்கு இந்த வருடாந்திர ஒப்பந்த பட்டியலின் மூலம் அடிப்படை சம்பளம் நிர்ணயிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement