அதை பற்றில்லாம் தெரியாது.. எங்ககிட்ட திட்டம் ரெடியா இருக்கு.. இங்கிலாந்து தொடர் பற்றி ஸ்ரேயாஸ் பேட்டி

Shreyas Iyer 2
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி துவங்குகிறது. ஒரு கட்டத்தில் ஜோ ரூட் தலைமையில் தடுமாற்றமாக செயல்பட்டு கொண்டிருந்த இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோர் புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக வந்தது முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடி வருகிறது.

அதன் பயனாக கடந்த 2 வருடங்களில் நிறைய வெற்றிகளை பெற்று வரும் இங்கிலாந்து இம்முறை இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிக்கும் என்று அந்நாட்டு ரசிகர்கள் நம்புகின்றனர். மேலும் இம்முறை இங்கிலாந்தின் ஆட்டம் அதிரடியாக இருக்கும் என்று நாசர் ஹுசைன் முதல் ஜேம்ஸ் ஆண்டர்சன் வரை சமீபத்திய பேட்டிகளில் இந்தியாவுக்கு மறைமுகமான எச்சரிக்கையை கொடுத்துள்ளனர்.

- Advertisement -

எப்படி வந்தாலும்:
ஆனால் 2012க்குப்பின் இங்கிலாந்து உட்பட உலகின் எந்த அணிக்கு எதிராகவும் இந்தியா தங்களுடைய சொந்த ஊரில் ஒரு தொடரில் கூட தோற்காமல் தொடர்ச்சியாக வெற்றி நடை போட்டு வருகிறது. எனவே இம்முறையும் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகிய தரமான ஸ்பின்னர்களை தாண்டி இந்திய மண்ணில் இங்கிலாந்து வெல்வது கடினம் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் பஸ்பால் எனப்படும் இங்கிலாந்தின் புதிய அதிரடியான அணுகுமுறையை பற்றி எனக்கு தெரியாது என இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார். எனவே இங்கிலாந்து எந்த அணுகு முறையில் விளையாட வந்தாலும் அதை சமாளித்து தோற்கடிக்க இந்திய அணித் திட்டங்களை தயாராக வைத்துள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“உண்மையை சொல்ல வேண்டுமெனில் எதிரணி என்ன செய்யப் போகிறது என்பது எனக்கு தெரியவில்லை. எந்த மனநிலையுடன் அவர்கள் இங்கே வருகிறார்கள் என்பது தெரியாது. இருப்பினும் அவர்கள் எப்படி வந்தாலும் நாங்கள் எங்களுடைய சொந்த திட்டங்களை பின்பற்றி சொந்த திறமையில் கவனம் செலுத்துவது முக்கியம். அதைப் பின்பற்றினாலே எதிரணி என்ன செய்வார்கள் என்பதில் கவனம் செலுத்தத் தேவையில்லை”

இதையும் படிங்க: என்னோட குருவே மேத்யூஸ் தாங்க.. ஜிம்பாப்வே சரித்திரம் படைக்க வைத்த இளம் வீரர் பேட்டி

“எனவே இந்த சிறிய அம்சத்தை மனதில் வைத்து நாங்கள் இத்தொடரை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். இந்த தொடரில் எங்களுடைய காலை முன்னோக்கி வைத்து செயல்பட உள்ள நாங்கள் வெற்றியை கைப்பற்ற பார்ப்போம்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இத்தொடரின் முதல் போட்டி வரும் ஹைதராபாத் நகரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement