என்னோட குருவே மேத்யூஸ் தாங்க.. ஜிம்பாப்வே சரித்திரம் படைக்க வைத்த இளம் வீரர் பேட்டி

Luke Jongwe
- Advertisement -

இலங்கைக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வே விளையாடி வருகிறது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக உதவும் இந்த தொடரில் முதல் போட்டியில் வென்ற இலங்கை ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் ஜனவரி 16ஆம் தேதி நடைபெற்ற 2வது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்த ஜிம்பாப்வே பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்துள்ளது.

கொழும்புவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அசலங்கா 69, ஏஞ்சலோ மேத்யூஸ் 66* ரன்கள் எடுத்த உதவியுடன் 174 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை சேசிங் செய்த ஜிம்பாப்வேவுக்கு கிரைக் எர்வின் 70 (54) ரன்கள் எடுத்த போதிலும் எதிர்ப்புறம் பிரையன் பெனட் 25, கேப்டன் சிகந்தர் ராசா 8, சீன் வில்லியம்ஸ் 1, ரியன் பர்ல் 13 என முக்கிய வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

குரு மேத்யூஸ்:
அதனால் கடைசி 14 பந்துகளில் ஜிம்பாப்வே வெற்றி பெறுவதற்கு 31 ரன்கள் தேவைப்பட்டதால் கண்டிப்பாக இலங்கை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது லுக் ஜோங்வே – க்ளைவ் மடண்டே ஆகியோர் அதிரடியாக விளையாடி போராடியதால் கடைசி ஓவரில் ஜிம்பாப்வே வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது.

அதை வீசிய அனுபவ வீரர் ஏஞ்சேலோ மேத்யூஸ் முதல் பந்திலேயே நோபால் போட்டதை பயன்படுத்தி சிக்சர் பறக்க விட்ட ஜோங்வே அடுத்த 2 பந்துகளில் பவுண்டரியும் சிக்ஸரும் அடித்து மொத்தம் 25* (12) ரன்கள் விளாசி இலங்கையின் வெற்றியை பறித்தார். அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4 தொடர் தோல்விகளுக்கு பின் முதல் முறையாக இலங்கைக்கு வெற்றியை பதிவு செய்து ஜிம்பாப்வே சரித்திரம் படைத்தது.

- Advertisement -

இந்நிலையில் 2014 காலகட்டங்களில் சிறுவயதில் தனது பேஸ்புக் பக்கத்தின் ப்ரொபைல் பிக்சராக வைக்கும் அளவுக்கு ஏஞ்சலோ மேத்யூஸ் தமக்கு குரு போன்றவர் என லுக் ஜோங்வே கூறியுள்ளார். அப்படிப்பட்ட மேத்யூஸ்க்கு எதிராக இப்போட்டியில் அடித்து நொறுக்கி வென்றது மகிழ்ச்சியை கொடுப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு. “நான் குழந்தையாக இருக்கும் போது மேத்யூஸ் தான் என்னுடைய வால்பேப்பராக இருந்தார்”

இதையும் படிங்க: வலுக்கட்டாயமா வாழ்த்துறாங்க.. இந்தியாவில் அதை செய்ய வேண்டியது என் கடமை.. ஆண்டர்சன் பேட்டி

“அவர் அப்போது கேரி நிக்கோலஸ் கியிரை பயன்படுத்தினார். நான் அப்போது இளம் பையனாக இருந்தேன். ஒரு கட்டத்தில் பேஸ்புக் பக்கத்தில் அவர் தான் என்னுடைய ப்ரொபைல் பிக்சராக இருந்தார். இன்று நிறைய நிகழ்வுகள் நடந்தது. அதனால் நிறைய உணர்ச்சிகளும் உள்ளுக்குள் ஓடுகிறது. இதற்காக நான் கடவுளுக்கு நன்றி நன்றியுடையவனாக இருக்கிறேன்” என்று கூறினார்.

Advertisement