நான் அப்றம் பாத்துக்குறேன்.. அஸ்வின் இந்த மேட்ச்லயே அதை செய்யணும்.. தனது பார்ட்னரை வாழ்த்திய ஜடேஜா

- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. ஜனவரி 25ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா மற்றும் அஸ்வின் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதை தொடர்ந்து விளையாடி வரும் இந்தியா முதல் நாள் முடிவில் 119/1 ரன்கள் அடித்து வலுவான துவக்கத்தை பெற்றது. முன்னதாக இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜோடியாக எடுத்த 6 விக்கெட்களையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் (506) எடுத்த இந்திய பவுலிங் ஜோடி என்ற மாபெரும் சாதனையை ரவீந்திர ஜடேஜா – ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் படைத்தனர்.

- Advertisement -

வாழ்த்திய ஜடேஜா:
இதற்கு முன் அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் சேர்ந்து ஜோடியாக 51 விக்கெட்டுகள் எடுத்திருந்ததே முந்தைய சாதனையாகும். மேலும் முதலில் இன்னிங்ஸில் எடுத்த 3 விக்கெட்டுகளையும் சேர்த்து இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் 493 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எனவே 2வது இன்னிங்ஸில் இன்னும் 7 விக்கெட்டுகள் எடுத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்த 2வது இந்தியர் என்ற வரலாற்றை அவர் படைப்பதற்கான வாய்ப்புள்ளது.

இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் இதே போட்டியில் 500 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைக்க வேண்டும் என்று விரும்புவதாக ரவீந்திர ஜடேஜா வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் 275 விக்கெட்கள் எடுத்துள்ள தாம் இத்தொடர் முடிவதற்குள் இன்னும் 25 விக்கெட்கள் எடுத்து 300 விக்கெட்களை எடுப்பேன் என்று நம்பிக்கை தெரிவிக்கும் ஜடேஜா இது பற்றி முதல் நாள் முடிவில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அஸ்வின் 500 டெஸ்ட் விக்கெட்களை எடுத்தால் அது மிகப்பெரிய சாதனையாகும். அவர் அதை இந்த போட்டியிலேயே செய்வார் என்று நம்புகிறேன். நானும் 300 விக்கெட்டுகள் எடுப்பதற்கு இன்னும் 25 விக்கெட்கள் உள்ளது. அதை எடுக்க இந்த தொடர் முழுவதும் தேவைப்படலாம். ஆனால் அஸ்வின் இந்த போட்டியிலேயே 500 விக்கெட்கள் எடுத்து சாதனை படைக்க நான் வாழ்த்துகிறேன்”

இதையும் படிங்க: எதுக்கு மேலயும் சர்பராஸ் கான் என்ன தான் பண்ணனும்? இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக – தரமான சம்பவம்

“அவர் தொடர்ந்து இந்தியாவுக்காக விக்கெட்டுகளை எடுக்க வேண்டும். அவருடன் சேர்ந்து பந்து வீசுவதை நான் விரும்புகிறேன். 2 ஸ்பின்னர்கள் சேர்ந்து விளையாடுவது உதவியாக இருக்கிறது. நாங்கள் ஃபீல்ட் செட்டிங், லைன், லென்த் போன்றவற்றில் தேவையான மெசேஜ்களை கொடுத்து சேர்ந்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றுகிறோம்” என்று கூறினார்.

Advertisement