- Advertisement -
ஐ.பி.எல்

முதல் பந்தில் இருந்தே நாங்கள் நினைச்ச அந்த விஷயம் நடக்கல – ஹாட்ரிக் தோல்விக்கு பின்னர் புலம்பிய ஜடேஜா

இந்தியாவில் நடைபெற்று வரும் 15வது ஐபிஎல் தொடரானது கடந்த மார்ச் 26-ஆம் தேதி துவங்கி தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முதல் 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்து ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை தந்தது. கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் 131 ரன்களை மட்டுமே குவித்து சென்னை அணி மோசமான தோல்வியை சந்தித்து இருந்தது.

அதனை தொடர்ந்து லக்னோ அணிக்கு எதிராக வீறுகொண்டு எழுந்த சிஎஸ்கே அணியானது 210 ரன்கள் குவித்தும் அவர்களின் மோசமான பந்து வீச்சு காரணமாக தோல்வியை சந்தித்தது. அதனை தொடர்ந்து நேற்று மும்பை மைதானத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும் சிஎஸ்கே அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது மிகப்பெரிய வருத்தத்தை தந்துள்ளது.

- Advertisement -

அதன்படி நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஜடேஜா முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்ததால் சென்னை அணி எளிதில் வெற்றி பெறும் என்று அனைவரும் நினைத்தார்கள். ஆனால் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 180 ரன்களை குவிக்க அதனைத் தொடர்ந்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே அணி விளையாடியது. ஆனால் சிஎஸ்கே அணி சேசிங் செய்தபோது துவக்கத்திலிருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தது.

அதனால் இறுதியில் 18 ஓவர்களில் 126 ரன்கள் எடுத்த நிலையில் சென்னை அணியானது ஆல்அவுட் ஆகியது. டாப் ஆர்டரில் ஒருவர் கூட பெரிய ரன் குவிப்புக்கு செல்லாத நிலையில் ஷிவம் துபே மட்டும் ஆறுதல் தரும் விதமாக 57 ரன்கள் குவித்தார். அதேபோல தோனி 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இப்படி சென்னை அணியின் மோசமான பேட்டிங் காரணமாக 54 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி சென்னையை எளிதில் வீழ்த்தியது.

- Advertisement -

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா கூறுகையில் : இந்து தோல்வி மிகவும் வருத்தமளிக்கிறது. நாங்கள் பவர்பிளே ஓவர்களிலேயே நிறைய விக்கெட்டுகளை இழந்து விட்டோம். அதுமட்டுமின்றி இந்த போட்டியின் முதல் பந்தில் இருந்தே எந்த ஒரு இடத்திலும் எங்களுக்கு மொமண்டம் கிடைக்கவே இல்லை. இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக பந்துவீசி இருந்தாலும் பேட்டிங்கில் பெரிய அளவு சோபிக்கவில்லை.

இதையும் படிங்க : கேப்டன் தோனி இல்லைனா சிஎஸ்கே டம்மியா? சென்னை ரசிகர்கள் விரும்பாத முக்கிய புள்ளிவிவரம் இதோ

ஷிவம் துபே மட்டும் ஒருபுறம் சிறப்பாக விளையாடினார். அவர் பேட்டிங் செய்த விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. நிச்சயம் அவர் எங்கள் அணியின் கீ பிளேயராக இனி வரும் போட்டிகளில் இருப்பார். நிச்சயமாக நாங்கள் எங்களுடைய சிறப்பான ஆட்டத்தை கொண்டுவர இனி வரும் போட்டிகளில் முயற்சிப்போம். அதுமட்டுமின்றி நாங்கள் வலுவான அணியாக மீண்டும் திரும்ப வருவோம் என்று ஜடேஜா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by