19 ஆவது ஓவரில் பிரசித் கிருஷ்ணாவின் ஓவரை அடித்து நொறுக்க இதுவே காரணம் – ஜடேஜா ஓபன்டாக்

Jadeja-2
- Advertisement -

அபுதாபி மைதானத்தில் நேற்று நடைபெற்ற 38-வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணி சார்பாக த்ரிப்பாதி 45 ரன்களையும், நிதீஷ் ராணா 37 ரன்களையும் குவித்தனர். அடுத்ததாக விளையாடிய சென்னை அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்து கடைசி பந்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

deepak

- Advertisement -

இந்த போட்டியில் சி.எஸ்.கே அணியின் துவக்க வீரர்களான டூபிளெஸ்ஸிஸ் மற்றும் கெய்க்வாட் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்து அற்புதமான தொடக்கத்தை கொடுத்தனர். பின்னர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரெய்னா, ராயுடு, தோனி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற இறுதியில் வெற்றிக்கு 2 ஓவர்களில் 26 ரன்கள் தேவைப்பட்டது.

அப்போது 19வது ஓவரை கொல்கத்தா வீரர் பிரசித் கிருஷ்ணா வீச அந்த ஓவரில் ஜடேஜா 2 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 22 ரன்களை குவித்து அசத்தினார். பின்னர் கடைசி ஓவரின் போது வெற்றிக்கு 4 ரன்கள் என்ற நிலை ஏற்பட்டபோது சுனில் நரைன் அந்த ஓவரின் முதல் பந்தில் சாம் கரனையும் 5வது பந்தில் ஜடேஜாவையும் ஆட்டமிழக்க வைத்து வெளியேற்றினார். பின்னர் கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் தீபக் சாஹர் சிங்கிள் அடித்து சென்னை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

jadeja 1

இந்த போட்டியின் போது ஒரு கட்டத்தில் 2 ஓவருக்கு 26 ரன்கள் தேவைப்பட்ட போது சென்னை அணி வெற்றி பெறுமா ? என்ற சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் அப்போது தனது அபாரமான அதிரடியை வெளிப்படுத்திய ஜடேஜா 19 ஆவது ஓவரில் 22 ரன்கள் குவித்து போட்டியை சென்னை அணிக்கு சாதகமாக மாற்றினார். பந்துவீச்சிலும் அவர் சிறப்பாக செயல்பட்டு இருந்ததால் ஆட்டநாயகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

- Advertisement -

Jadeja

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ஜடேஜா கூறுகையில் : 5 மாதங்களாக நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி விட்டு அதன் பிறகு தற்போது மீண்டும் வந்து டி20 கிரிக்கெட்டில் விளையாடுவது மிக கடினமான ஒன்று. ஆனாலும் நான் வலைப்பயிற்சியில் பேட்டிங்கில் பெரிதளவு கவனத்தை செலுத்தினேன். அதன் காரணமாகவே இந்த போட்டியிலும் என்னால் பேட்டை சுழற்ற முடிந்தது. இந்த போட்டியில் வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 26 ரன்கள் தேவைப்பட்ட போது நிச்சயம் அந்த ரன்னை அடிக்க முடியும் என்று உணர்ந்தேன்.

இதையும் பாருங்க : தினேஷ் கார்த்திக்கின் கேட்ச்சை பிடித்தே அவரது சாதனையை தகர்த்த தல தோனி – மாஸ் ரெக்கார்ட் இதோ

மேலும் பிரசித் கிருஷ்ணா எப்படி பந்துவீச போகிறார் என்பதை முன்கூட்டியே கணித்துக் கொண்டேன். எப்படியும் அவர் யார்க்கர் அல்லது ஸ்லோ பால் வீசுவார் என்பதனால் நான் தயாராக இருந்தேன். அதிர்ஷ்டவசமாக அனைத்து பந்துகளும் என்னுடைய பேட்டில் கனெக்ட் ஆனதால் இன்று எங்கள் அணி வெற்றியும் பெற்றது என்று ஜடேஜா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement