தினேஷ் கார்த்திக்கின் கேட்ச்சை பிடித்தே அவரது சாதனையை தகர்த்த தல தோனி – மாஸ் ரெக்கார்ட் இதோ

Dhoni-1
Dhoni Captain
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் வரலாற்றில் பேட்டிங்கில் சிறந்த பினிஷெர் என்பது நாம் அறிந்ததே. ஆனால் விக்கெட் கீப்பிங்கிலும் கில்லாடியான அவர் தற்போது 40 வயதான நிலையில் ஐபிஎல் வரலாற்றில் தினேஷ் கார்த்திக்கின் முக்கியமான ஒரு சாதனையை தகர்த்துள்ளார். அதன்படி நேற்று நடைபெற்ற கொல்கத்தா மற்றும் சென்னை அணிக்கு இடையேயான போட்டியின் போது தினேஷ் கார்த்திக்கின் கேட்சை பிடித்த அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக கேட்ச்களை பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

dhoni 2

- Advertisement -

இதற்கு முன்னதாக ஐபிஎல் வரலாற்றில் விக்கெட் கீப்பராக 115 கேட்சிகளுடன் தினேஷ் கார்த்திக் முதலிடத்தில் இருந்தார். இந்நிலையில் விக்கெட் கீப்பராக தோனி நேற்று தினேஷ் கார்த்திக்கின் கேட்ச்யை பிடித்ததன் மூலம் 116 கேட்ச்களுடன் அதிக கேட்ச்களை பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ஹேசல்வுட் வீசிய பந்தினை அடிக்க முயன்ற தினேஷ் கார்த்திக் எட்ஜாக அதனை தோனி லாவகமாக பிடித்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதுவரை ஐபிஎல் வரலாற்றில் தோனி 116 கேட்ச்கள் மற்றும் 39 ஸ்டம்பிங்களுடன் 155 விக்கெட்டுகள் விழுவதற்கு காரணமாக இருந்துள்ளார். அவருக்கு அடுத்து தினேஷ் கார்த்திக் 115 காட்சிகள் மற்றும் 31 ஸ்டம்பிங்களுடன் என 146 விக்கெட்டுகள் விழ காரணமாக இருந்திருக்கிறார்.

karthik 1

அவர்கள் இருவருக்கு பின்னர் ராபின் உத்தப்பா, பார்த்திவ் படேல், விருத்திமான் சாஹா ஆகியோர் முறையே 3, 4, 5 ஆகிய இடங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது.

- Advertisement -

அடுத்ததாக விளையாடிய சிஎஸ்கே அணியானது போட்டியின் கடைசி ஓவரின் கடைசி பந்தில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில்லிங்கான வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சி.எஸ்.கே அணியானது புள்ளி பட்டியலிலும் முதல் இடத்திற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கவுள்ள மொயின் அலி – அதிரடி முடிவுக்கு காரணம் என்ன ?

இது போன்ற மேலும் பல ஐ.பி.எல் செய்திகளை தொடர்ந்து பெற எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement