டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கவுள்ள மொயின் அலி – அதிரடி முடிவுக்கு காரணம் என்ன ?

Moeen-Ali
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் 34 வயதான முன்னணி ஆல்ரவுண்டரான மொயின் அலி கடந்த 2014 ஆம் ஆண்டு கிரிக்கெட்டிற்கு அறிமுகமாகி மூன்று வகையான இங்கிலாந்து அணியிலும் தொடர்ந்து விளையாடி வருகிறார். இதுவரை 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2914 ரன்களையும், 195 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதேபோன்று 112 ஒருநாள் போட்டிகள் மற்றும் 38 டி20 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். இந்நிலையில் அவர் சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவிக்க உள்ளதாக கூறியுள்ளார்.

Moeen

- Advertisement -

மேலும் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விரும்புவதை அணியின் பயிற்சியாளர் சில்வர்வுட் மற்றும் கேப்டன் ஜோ ரூட் ஆகியோரிடம் முறைப்படி தெரிவித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் டி20 லீக்களில் கலந்துகொண்டு விளையாடுவேன் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர் அடுத்து டி20 உலகக் கோப்பை தொடரிலும் விளையாட உள்ளார். இந்நிலையில் இந்த ஆஷஸ் தொடருக்கு முன்னர் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு அறிவிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Moeen

இங்கிலாந்து அணி சார்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட் மற்றும் 2000 ரன்கள் ஆகியவற்றை வேகமாக குவித்த வீரர் என்ற சாதனையை மொயின் அலி வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வை அறிவிக்க காரணம் யாதெனில் : கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பயோபபுள் வளையத்தில் கிரிக்கெட் விளையாடி வருவதால் குடும்பத்தினருடன் நேரம் முடியவில்லை என்றும் மன அழுத்தம் அதிகமாக இருப்பதன் காரணத்தினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற அவர் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

moeen ali

மேலும் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாடுவார் என்றும் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement