IND vs ENG : நிர்வாகத்தின் நம்பிக்கை வீண் போகல. தரமான சம்பவத்தை செய்த ரவீந்திர ஜடேஜா – விவரம் இதோ

Ravindra-Jadeja
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது போட்டி ஜூலை 1-ஆம் தேதி எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோகித் சர்மாவிற்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது பும்ரா தலைமையில் முதல் முறையாக இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன் படி நேற்று துவங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தீர்மானம் செய்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்படி தங்களது முதல் இன்னிங்க்சை ஆரம்பித்ததும் துவக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியானது ஒரு கட்டத்தில் 98 ரண்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

Rishabh Pant Ind vs ENg Ravindra Jadeja

- Advertisement -

ஆனாலும் 6 விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா ஆகியோரது ஜோடி அபாரமான ரன்குவிப்பில் ஈடுபட்டு 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. அவர்களின் மிகப்பெரிய பாட்னர்ஷிப் காரணமாக இந்திய அணிக்கு விரைவாக ரன்கள் சேர்ந்தது. அதோடு ரிஷப் பண்ட் 146 ரன்களும், ஜடேஜா 104 ரன்களும் என இருவரும் தங்களது பங்கிற்கு சதத்தினை விளாச இறுதி நேரத்தில் அணியின் கேப்டன் பும்ரா 16 பந்துகளை சந்தித்து ஆட்டம் இழக்காமல் 31 ரன்கள் அதிரடியாக குவித்தன் காரணமாகவும் இந்திய அணி முதல் இன்னிங்சில் நல்ல ரன் குவிப்பினை வழங்கியது.

ஒரு கட்டத்தில் 200 ரன்களே வராது என்று நினைத்தபோது 416 ரன்கள் வந்ததுள்ளதால் தற்போது இந்திய அணிக்கு இது கூடுதல் சாதகமாக அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது டாசுக்கு பிறகு இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தமிழக வீரர் அஷ்வின் சேர்க்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது. மேலும் அயல்நாட்டு மண்ணில் சுழற்பந்து வீச்சு பெருமளவில் எடுபடாததால் பேட்டிங் நன்கு தெரிந்த ஒரு ஸ்பின்னராக ஜடேஜா விளையாடினார்.

Ravindra Jadeja 1

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிலும் அயல்நாட்டு மண்ணில் அஷ்வினை விட ஜடேஜா நன்றாக பேட்டிங் செய்யக்கூடியவர். அதன் காரணமாகவே அஸ்வின் இந்த போட்டியில் சேர்க்கப்படவில்லை என்றும் ஒரு கருத்து வெளியானது. அணியின் நிர்வாகமும் அயல்நாட்டு கிரிக்கெட் தொடரில் அஸ்வினை விட ஜடேஜாவின் பேட்டிங்கின் மீது பெரிய நம்பிக்கை வைத்து களம் இறக்கி வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் நிர்வாகம் ஜடேஜாவின் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் ரிஷப் பண்டுடன் அருமையான பாட்னர்ஷிப் அமைத்த ஜடேஜா இறுதியில் பௌலர்களை வைத்துக் கொண்டும் மிக அருமையாக பேட்டிங் செய்து 104 ரன்கள் அடித்தார். அவரது இந்த பேட்டிங் தற்போது அணியின் நிர்வாகம் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றி உள்ளது என்றே கூற வேண்டும்.

இதையும் படிங்க : IND vs ENG : கேப்டன் தினேஷ் கார்த்திக் தலைமையில் கோப்பையை வென்ற இந்தியா அபார வெற்றி – முடிவுகள் இதோ

ஏனெனில் பேட்டிங் ஆர்டரில் ஏழாவது இடத்தில் களமிறங்கும் ஜடேஜா இப்படி சதம் அடிப்பது என்பது சாதாரண விடயம் கிடையாது. அதுவும் அணி இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிய வேளையில் அவர் அடித்த இந்த சதத்திற்கு மதிப்பு அதிகம் என்றே கூறலாம். எனவே ஜடேஜாவின் இந்த தேர்வினை பொறுத்தவரை டிராவிட் தலைமையிலான இந்திய அணியும், நிர்வாகமும் எடுத்த இந்த முடிவு மிகச்சரியானது என்பதை அவர் நிரூபித்து விட்டார்.

Advertisement