தான் செய்த மிகப்பெரிய தவறினை உணர்ந்து மைதானத்திலேயே வருத்தப்பட்ட ஜடேஜா – இதை கவனிச்சீங்களா?

Jadeja-2
- Advertisement -

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதலாவது போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா அணியிடம் மோசமான தோல்வியை தழுவியது. குறிப்பாக முதலில் விளையாடிய சென்னை அணியானது பெரிய ரன் குவிப்புக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 131 ரன்களை மட்டுமே குவித்ததால் கொல்கத்தா அணி அதனை எளிதாக சேஸிங் செய்து வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் சென்னை அணி துவக்கத்திலேயே ஓப்பனர்கள் இருவரையும் இழந்த நிலையில் உத்தப்பா மற்றும் ராயுடு ஆகியோர் சரிவிலிருந்து அணியை மீட்க போராடினர். ஆனால் உத்தப்பா ஷெல்டன் ஜேக்சன் செய்த அற்புதமான ஸ்டம்பிங் காரணமாக வெளியேறினார். பின்னர் ராயுடு மற்றும் ஜடேஜா ஆகியோர் மீண்டும் ஒரு பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாட நினைத்தபோது ஜடேஜா செய்த சிறிய தவறினால் ராயுடு ஆட்டமிழந்து வருத்தத்துடன் வெளியேறினார்.

17 பந்துகளை சந்தித்த நிலையில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் என 15 ரன்கள் குவித்த நிலையில் ராயுடு ஜடேஜாவின் தவறான அழைப்பிற்கு ஓட நினைத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். போட்டியின் திருப்புமுனையாகும் அந்த ரன் அவுட் ஆனது பார்க்கப்படுகிறது. ஏனெனில் நிச்சயமாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் ராயுடு மிடில் ஓவர்களில் ரன்ரேட்டை உயர்த்தி இருப்பார்.

jadeja 3

இப்படி ஒரு பெரிய விக்கெட்டை அவசரப்பட்டு இழக்க தான் செய்த தவறு தான் காரணம் என்பதை உணர்ந்து ஜடேஜா மைதானத்திலேயே வருத்தப்பட்டார். அதோடு மட்டுமின்றி ஷிவம் துபே ஆடும்போதும் அவர் சிங்கிள் எடுக்க ஆசைப்பட்டு ஓட நினைத்த போதும் ரன் அவுட்டுக்கான வாய்ப்பு இருந்தது. இப்படி எதிர்முனையில் இருந்த பேட்ஸ்மேன்களுக்கு சரியான சிக்னல் ஜடேஜா மூலம் கிடைக்காததால் அடிக்கடி ரன் அவுட் வாய்ப்புகள் கொல்கத்தா அணிக்கு கிடைத்தது.

- Advertisement -

இதன் காரணமாக ஜடேஜாவும் சற்று அதிர்ப்தி அடைந்தார். இறுதியில் ஜடேஜாவும் தோனியும் எவ்வளவோ போராடினாலும் இறுதியில் 131 ரன்களை மட்டுமே சென்னை அணியால் குவிக்க முடிந்தது. ஆனாலும் இந்த ரன்கள் சென்னை அணியின் வெற்றிக்கு பத்தாமல் போனது.

இதையும் படிங்க : உங்களோட வேகம் அப்படியே தோனி மாதிரியே இருக்கு – கொல்கத்தா வீரரை பாராட்டிய சச்சின்

நடப்புச் சாம்பியனான சிஎஸ்கே அணி முதல் போட்டியில் இருந்து வெற்றிகரமாக பயணத்தை துவங்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் கொல்கத்தா அணிக்கு எதிராக இப்படி அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் சென்னை போன்ற பலமான அணி நிச்சயம் இது போன்ற தோல்விகளிலிருந்து மிகப் பிரமாதமாக மீண்டு வரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றே கூறலாம்.

Advertisement