உங்களோட வேகம் அப்படியே தோனி மாதிரியே இருக்கு – கொல்கத்தா வீரரை பாராட்டிய சச்சின்

Sheldon-Jackson-1
- Advertisement -

மும்பை வான்கடே மைதானத்தில் பதினைந்தாவது ஐபிஎல் தொடருக்கான முதல் போட்டி நேற்று இரவு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இரு அணிகளுமே புதிய கேப்டனின் தலைமையின் கீழ் விளையாடியதால் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.

இன்னியிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே அணியை வீழ்த்தி தங்களது முதல் வெற்றியை இந்த தொடரில் பதிவு செய்தது. அதன்படி நேற்று முதலில் விளையாடிய சென்னை அணியானது 20 ஓவர்களின் முடிவில் 131 ரன்களை குவிக்க அடுத்ததாக 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 133 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் கொல்கத்தா அணிக்காக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடிய செல்டன் ஜாக்சன் தனது அசத்தலான பங்களிப்பை வழங்கியிருந்தார். உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் 35 வயதான வீரரான இவர் 2017 ஆம் ஆண்டே ஐபிஎல் தொடரில் இடம் பெற்றிருந்தாலும் தற்போது தான் சரியான வாய்ப்பினை பெற்று வெளிச்சத்திற்கு வந்துள்ளார் என்று கூறலாம்.

நேற்றைய போட்டியில் இவரது விக்கெட் கீப்பிங் பலரது பாராட்டையும் பெற்றது. ஸ்டம்பிற்கு பின்னால் மிக சிறப்பாக செயல்பட்ட அவர் ராபின் உத்தப்பாவை ஸ்டம்பிங் செய்த விதம் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. வருண் சக்ரவர்த்தி வீசிய வொயிடு பந்தினை சரியாக கணித்து பிடித்த செல்டன் ஜாக்சன் கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டம்பிங் செய்து உத்தப்பாவை வெளியேற்றினார். சென்னை அணி சரிவில் இருந்து மெல்ல மீள துவங்கிய வேளையில் செல்டன் ஜாக்சன் செய்த ஸ்டம்பிங் கொல்கத்தா அணிக்கு மிக சாதகமான ஒரு விடயமாக மாறியது.

- Advertisement -

இந்நிலையில் அவரது இந்த ஸ்டம்பிங் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் மூலமாக அவருக்கு வாழ்த்து ஒன்றினை பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள அந்தக் கருத்தில் : இது ஒரு அருமையான ஸ்டம்ப்பிங். உங்களுடைய வேகம் எனக்கு தோனியை ஞாபகப்படுத்துகிறது. மின்னல் வேக ஸ்டம்பிங் என பதிவிட்டுள்ளார். அவரது இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : விடைபெற்ற இந்தியாவின் ஆல் – டைம் கிரேட் கேப்டன் : 2007 – 2021 வரை மொத்த கோப்பைகளின் லிஸ்ட் இதோ

மேலும் இந்த போட்டியில் அந்த ஸ்டம்பிங் தவிர மிகச் சிறப்பாக கீப்பிங் செய்த செல்டன் ஜாக்சன் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்தார். உள்ளூர் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக ஆடிவரும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த வேளையில் தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு வாய்ப்பு கிடைத்துள்ளதால் அவரை ரசிகர்கள் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement