கேப்டனான முதல் போட்டியிலேயே விசித்திரமான சாதனையில் தனது பெயரை பதித்த – ரவீந்திர ஜடேஜா

Jadeja
- Advertisement -

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று துவங்கிய உள்ள பதினைந்தாவது ஐபிஎல் தொடருக்கான முதல் லீக் ஆட்டத்தில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு இரு தினங்கள் முன்னதாக தோனி தனது கேப்டன் பதவியில் இருந்து வெளியேறியதால் சென்னை அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டார்.

kkrvscsk

- Advertisement -

ஏற்கனவே தோனி சென்னை அணியில் இருந்து விலகும் போது நிச்சயம் புதிய கேப்டனாக ஜடேஜா தான் நியமிக்கப்படுவார் என்று பலரும் கூறியிருந்த நிலையில் தற்போது தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதன் காரணமாக கேப்டன் பொறுப்பு வழங்கப் பட்டுள்ளது.

அதன்படி இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக துவங்கிய முதல் லீக் போட்டியில் ஐபிஎல் தொடரில் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா முதல் போட்டியில் விளையாடி வருகிறார். 2008ஆம் ஆண்டு முதலே ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ஜடேஜா தற்போது சென்னை அணிக்கு கேப்டனாக விளையாடி வருவதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் விசித்திரமான ஒரு சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

Dhoni

அதன்படி அந்த சாதனை யாதெனில் ஐபிஎல் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடியதற்குப் பின்னர் கேப்டனாக அறிமுகமான வீரர் என்ற சாதனையை தற்போது ஜடேஜா படைத்துள்ளார். அதாவது இன்று 201 ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடி வரும் அவர் ஏற்கனவே 200 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய பின்னர் தற்போது கேப்டன் பதவியை பெற்றுள்ளார்.

- Advertisement -

இதன்காரணமாக அதிக போட்டிகளில் விளையாடிய பின்னர் கேப்டனான வீரர் என்ற சாதனையை படைத்தார். இவருக்கு முன்னதாக மனிஷ் பாண்டே 153 போட்டிகளில் விளையாடிய பின்னர் ஐபிஎல் தொடரில் கேப்டனாக செயல்பட்டு இருந்தார்.

இதையும் படிங்க : கேப்டன் பதவியில் இருந்து விலகினால் என்ன? முதல் போட்டியிலேயே சம்பவம் செய்த தல தோனி – விவரம் இதோ

அந்த சாதனையை தற்போது கடந்த ஜடேஜா இன்று தனது 201-ஆவது போட்டியில் முதல் முறையாக கேப்டனாக செயல்பட்டு ஐ.பி.எல் வரலாற்றில் விசித்திரமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement