கேப்டன் பதவியில் இருந்து விலகினால் என்ன? முதல் போட்டியிலேயே சம்பவம் செய்த தல தோனி – விவரம் இதோ

Dhoni
- Advertisement -

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று துவங்கிய பதினைந்தாவது ஐபிஎல் தொடருக்கான முதலாவது லீக் போட்டியில் ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதி வருகின்றன. நடப்புச் சாம்பியனான சென்னை அணி கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த கொல்கத்தா அணியை எதிர்த்து விளையாடுவதால் இந்த முதல் போட்டியே பெரிய போட்டியாக அமைந்துள்ளது.

kkrvscsk

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தாங்கள் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி தற்போது சென்னை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் குவித்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது 132 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களம் இறங்கி விளையாடி வருகிறது.

இந்த போட்டியில் சென்னை அணி தங்களது தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டேவான் கான்வே ஆகிய இருவருடனும் களம் இறங்கியதால் இந்த ஜோடி சிறப்பான துவக்கத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் முதல் ஓவரின் 3-வது பந்தில் ருதுராஜ் ரன் ஏதும் எடுக்காமலும், நான்காவது ஓவரின் முதல் பந்தில் டேவான் கான்வே 3 ரன்கள் எடுத்திருந்த நிலையிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

Dhoni 1

இதன் காரணமாக பவர் பிளேவிற்குள்ளே 2 விக்கெட்டுகளை சென்னை அணி இழந்தது. பின்னர் உத்தப்பா மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டு எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அணியின் எண்ணிக்கை 52 ஆக இருந்தபோது 4 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி தடுமாறியது. பின்னர் ஷிவம் துபேவும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேற சென்னை அணியானது 10.5 ஓவர்களில் 61 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

- Advertisement -

இப்படி ஆரம்பத்திலேயே படுமோசமான துவக்கத்தை சென்னை அணி பெற்றதால் எவ்வளவு ரன்களை குவிக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. இருப்பினும் பின்வரிசையில் ஜடேஜாவுடன் கைகோர்த்த தோனி தனது நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். துவக்கத்தில் பந்துகளை சற்று விழுங்கினாலும் இறுதியில் 38 பந்துகளை சந்தித்த அவர் 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 50 ரன்கள் குவித்தார்.

இதையும் படிங்க : நெனச்சி பாத்தாலே வயித்துக்குள்ள பட்டாம்பூச்சி பறக்குது – பூரிப்புடன் உணர்வை பகிர்ந்த விராட் கோலி

ஜடேஜா 28 பந்துகளில் ஒரு சிக்சருடன் 26 ரன்கள் குவித்தார். இதில் குறிப்பிடவேண்டிய யாதெனில் கேப்டன் பதவியில் இருந்து வெளியேறிய தோனி தனது பேட்டிங்கில் கவனம் செலுத்துவார் என்று கூறப்பட்ட வேளையில் முதல் போட்டியிலேயே அசத்தலான ஆட்டத்தை விளையாடி அரைசதம் அடித்து தனது பேட்டிங் திறமையை நிரூபித்துள்ளார். தோனி இன்று அடித்த அரைசதமானது ஐபிஎல் தொடரில் அவர் அடிக்கும் 24-வது அரைசதம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement