நெனச்சி பாத்தாலே வயித்துக்குள்ள பட்டாம்பூச்சி பறக்குது – பூரிப்புடன் உணர்வை பகிர்ந்த விராட் கோலி

Kohli
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் தொடரானது தற்போது 14 சீசன்ங்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் இந்த ஆண்டிற்கான 15-வது சீசன் இன்று மும்பை மைதானத்தில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான முதல் லீக் போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி வருகின்றன.

இந்த தொடரின் முதல் போட்டியே ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகிய இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராத் கோலி பெங்களூர் அணிக்காக முழுநேர பேட்ஸ்மேனாக செயல்பட இருக்கிறார்.

- Advertisement -

ஐ.பி.எல் வரலாற்றில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் பெங்களூர் அணியை வழிநடத்தி வந்த அவர் ஒரு முறை கூட ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை என்கிற காரணத்தினாலும் தனது பேட்டிங் பார்மை மேம்படுத்த வேண்டும் என்கிற காரணத்தினாலும் இந்த ஆண்டு கேப்டன் பதவியில் இருந்து விலகி பேட்ஸ்மேனாக விளையாடுவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த புதிய தொடரை எதிர்பார்த்து காத்திருக்கும் விராட் கோலி இந்தத்தொடர் குறித்து பதிவிட்டுள்ள ஒரு கருத்தில் : “வார இறுதி நாள் அன்று நடைபெற உள்ள போட்டியை எதிர்கொள்ள தயாராகி வருகிறேன்”.

- Advertisement -

ஐபிஎல் மீதான ஆர்வமும் மோகமும் தீயாய் பரவி இருக்கிறது. இந்த தொடரை துவங்குவதை நினைத்தாலே வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறப்பது போல உணர்வதாக பதிவிட்டுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் இந்த செய்தியை அவர் பதிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க : ஆஹா ஒஹோன்னு புகழப்பட்ட சி.எஸ்.கே வீரர் முதல் போட்டியிலேயே ஏமாற்றம் – என்ன இப்படி ஆயிடுச்சி?

இந்த பதிவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பெங்களூரு அணி இந்தத்தொடருக்கான தங்களது முதல் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து நாளை விளையாட இருக்கிறது. அந்த அணியின் புதிய கேப்டனாக டூபிளெஸ்ஸிஸ் அணியை வழிநடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement