ஆஹா ஒஹோன்னு புகழப்பட்ட சி.எஸ்.கே வீரர் முதல் போட்டியிலேயே ஏமாற்றம் – என்ன இப்படி ஆயிடுச்சி?

CSK
- Advertisement -

ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி வருகின்றன. இந்த ஐபிஎல் தொடரில் முதல் போட்டியிலேயே பலமான இரு அணிகள் மோதுவதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை தொட்டுள்ளது.

kkrvscsk

- Advertisement -

அதன்படி சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி வெளியேறியதால் இன்று அணியில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் எந்தெந்த வீரர்கள் அணியில் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற ஷ்ரேயாஸ் ஐயர் தாங்கள் முதலில் பந்து வீசுவதாக தேர்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து சென்னை அணியில் உள்ள வீரர்கள் குறித்து பேசிய ஜடேஜா அறிமுக வீரராக டேவன் கான்வே விளையாடுவதாக அறிவித்தார். மேலும் ராஜஸ்தான் அணியில் இருந்து வாங்கப்பட்ட ஷிவம் துபே, மும்பை அணியில் இருந்து வாங்கப்பட்ட ஆடம் மில்னே, உள்ளூர் வீரர் துஷார் பாண்டே ஆகியோர் இந்த அணியில் இடம்பிடித்துள்ளார்.

conway

முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ள இந்த சிஎஸ்கே அணி எவ்வாறு செயல்படப் போகிறது என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது முதல் இன்னிங்சை விளையாடி வரும் சென்னை அணியானது துவக்கத்திலேயே ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டேவான் கான்வே ஆகியோரது பார்ட்னர்ஷிப் மூலம் பலமான துவக்கத்தை தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே விக்கெட்டை இழந்து கெய்க்வாட் அதிர்ச்சி அளித்தார். ரன் ஏதும் எடுக்காமல் அவர் ஆட்டம் இழந்து வெளியேறிய நிலையில் நியூசிலாந்தை சேர்ந்த மற்றொரு தொடக்க வீரரான டேவான் கான்வே சிறப்பாக விளையாடுவார் என்று பேசப்பட்டது. ஏனெனில் 30 வயதாகும் அவர் டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக 6 போட்டிகளில் விளையாடி 139 ஸ்ட்ரைக் ரேட் உடன் 602 ரன்கள் குவித்து உள்ளதால் நிச்சயம் சிறப்பான துவக்கம் கொடுப்பார் என்று இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பேசப்பட்டது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 தொடருடன் தல தோனி ஓய்வு பெறுவாரா – சிஎஸ்கே நிர்வாகம் அளித்த நேரடி பதில் இதோ

ஆனால் இந்த முதல் போட்டியின் போது எட்டு பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். துவக்கத்திலிருந்தே பந்துகளை எதிர்கொள்ள சிரமப்பட்ட அவர் இறுதியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியது அனைவரது மத்தியிலும் பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது என்றே கூறலாம்.

Advertisement