ஐபிஎல் 2022 தொடருடன் தல தோனி ஓய்வு பெறுவாரா – சிஎஸ்கே நிர்வாகம் அளித்த நேரடி பதில் இதோ

Dhoni
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் மார்ச் 26ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்குகிறது. இம்முறை லக்னோ மற்றும் குஜராத் போன்ற புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் வழக்கத்தை விட விரிவடைந்துள்ள ஐபிஎல் தொடர் இம்முறை 10 அணிகள் பங்குபெறும் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட தொடராக நடைபெறுகிறது.

Ticket

- Advertisement -

மும்பை, புனே ஆகிய நகரங்களில் மட்டும் நடைபெறும் இந்தத் தொடரின் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றை பார்ப்பதற்காக 25% ரசிகர்கள் மட்டும் மைதானத்தில் அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

விடைபெற்ற கேப்டன் தல தோனி:
இந்த தொடரில் அபாரமாக செயல்பட்டு கோப்பையை வெல்வதற்காக நடப்பு சாம்பியன் சென்னை உட்பட அனைத்து அணிகளும் தயாராகி உள்ளன. அந்த வேளையில் முதல் போட்டித் துவங்குவதற்கு ஒருநாள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை காலம் காலமாக தலைமைப் பொறுப்பேற்று வழிநடத்தி வந்த நட்சத்திர வீரர் எம்எஸ் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக நேற்று திடீரென அறிவித்தார்.

Dhoni

கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட முதல் சீசனில் இருந்து கடந்த 2021 வரை சென்னை பங்கேற்ற அனைத்து தொடர்களிலும் அந்த அணியை முன் நின்று வழிநடத்திய அவர் ஒரு கேப்டனுக்கு இலக்கணமாக ஒவ்வொரு வருடமும் அந்த அணிக்கு தொடர்ச்சியான வெற்றிகளை பரிசளித்து ஐபிஎல் வரலாற்றில் 2-வது வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார். அவர் தலைமையில் மொத்தம் 12 வருடங்கள் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அதில் 11 முறை பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்று 9 சீசன்களில் இறுதிப்போட்டியில் விளையாடி அதில் 4 கோப்பைகள் வென்று ஐபிஎல் வரலாற்றில் 2-வது வெற்றிகரமான அணியாக ஜொலிக்கிறது.

- Advertisement -

மகத்தான கேப்டன்:
மேலும் ஒட்டுமொத்தமாக 204 ஐபிஎல் போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்துள்ள அவர் அதில் 121 வெற்றிகளை 59.60% என்ற விகிதத்தில் பதிவு செய்து 5 கோப்பைகளை வென்றுள்ள ரோஹித் சர்மா காட்டிலும் போட்டிகள் மற்றும் வெற்றி சராசரி அடிப்படையில் ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார். தற்போது 40 வயதை கடந்துவிட்ட அவர் சென்னை அணியின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு தனது கேப்டன் பதவியை மற்றொரு நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்துள்ளார்.

Dhoni-3

இதையடுத்து இந்த வருடம் அவர் தலைமையில் முதல் முறையாக ஒரு சாதாரண வீரராக சென்னை அணியில் தோனி விளையாட உள்ளார். காலம் காலமாக அவரை ஒரு மாஸ் நிறைந்த கூல் கேப்டனாக பார்த்த சென்னை ரசிகர்கள் முதல் முறையாக ஒரு சாதாரண வீரராக விளையாடுவதை பார்க்கப் போவதை நினைத்து சோகமடைந்துள்ளார்கள். அது மட்டுமல்லாமல் 40 வயதை கடந்துவிட்டத்ன் காரணமாக கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ள அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவது இதுதான் கடைசி சீசன் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது சென்னை ரசிகர்களுக்கு மேலும் கலக்கத்தை உண்டாக்குகிறது.

சென்னையின் பதில் இதோ:
இந்நிலையில் ஐபிஎல் 2022 தொடருடன் எம்எஸ் தோனி ஒட்டுமொத்தமாக ஓய்வு பெறுகிறாரா என்ற கேள்விக்கு சென்னை அணியின் நிர்வாக இயக்குனர் காசிவிசுவநாதன் பதிலளித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது அவரின் கடைசி தொடராக இருக்காது என நம்புகிறேன். அவர் தொடர்ச்சியாக சென்னை அணியில் பங்கேற்பார். நாங்கள் எப்போதுமே எம்எல் தோனியின் முடிவுகளை மதித்துள்ளோம். ஏனெனில் அவர் எங்கள் அணியின் தூணாக இருந்துள்ளார். வரும் காலங்களிலும் தூணாக இருந்து ஜடேஜாவையும் அணியில் உள்ள இதர வீரர்களையும் வழிநடத்துவார். மேலும் தன் தலைமையில் நடந்து வந்த சென்னை அணி ஜடேஜா தலைமையில் வெற்றிகரமாக நடப்பதற்காகவே அவர் இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளார். ஒரு கேப்டனாகவும் ஒரு வீரராகவும் எப்போதும் சென்னை மீது அக்கறை காட்டி வந்த அவர் அதற்கு நன்மை செய்யும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளார்” என கூறினார்.

Kasi

அதாவது ஐபிஎல் 2022 தொடருக்கு பின்பும் கூட சென்னை அணியில் எம்எஸ் தோனி தொடர்வார் என சென்னை அணி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஒருவேளை அடுத்த வருடம் ஓய்வு பெற்றாலும் கூட சென்னையின் மீது இருக்கும் அக்கறை காரணமாக வரும் காலங்களில் ஒரு பயிற்சியாளராக சென்னை அணியை அவர் நிச்சயமாக வழிநடத்துவார் என காசி விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டடு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற சச்சின் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இப்போதும்கூட ஆலோசகராக இருந்து வருகிறார். அதேபோல வரும் காலங்களில் சென்னை அணியுடன் தொடர்ந்து எம்எஸ் தோனி செயல்படுவார் என சென்னை அணி நிர்வாகம் கூறியுள்ளது.

Advertisement