IND vs BAN : ரோஹித்தை தொடர்ந்து மேலும் 2 வீரர்கள் டெஸ்ட் தொடரிலிருந்து விலகல் – இதுவேறயா?

IND 1
- Advertisement -

வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரண்டு ஆட்டங்களிலுமே வெற்றி பெற்ற வங்கதேச அணியானது இந்த தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியதோடு முன்னிலையில் இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை டிசம்பர் 10-ஆம் தேதி சட்டகிராம் நகரில் நடைபெற்று முடிவடைய உள்ளது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது டிசம்பர் 14-ஆம் தேதி முதல் துவங்குகிறது.

ஏற்கனவே நடைபெற்று வரும் இந்த ஒருநாள் தொடரில் ஏகப்பட்ட வீரர்கள் காயம் காரணமாக வெளியேறிய நிலையில் ரோகித் சர்மாவும் கடந்த இரண்டாவது போட்டியில் கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து வெளியேறி உள்ளார். அதோடு மும்பைக்கு திரும்பும் அவர் பரிசோதனைக்கு பிறகு தான் இந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்பாரா? இல்லையா? என்பது குறித்த தகவல் வெளியாகும்.

Shami and Jadeja

அதேவேளையில் அவர் இந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்பது சந்தேகமாகி உள்ளது என்றும் அவருக்கு பதில் அபிமன்யு ஈஸ்வரன் விளையாடுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை தொடர்ந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் இந்த டெஸ்ட் தொடரிலிருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

ஏற்கனவே வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பிடித்திருந்த இவர்கள் இருவரும் காயம் காரணமாக தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வருவதால் இந்த டெஸ்ட் தொடரிலும் அவர்கள் இடம் பிடிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக இடம்பிடிக்கப்போகும் வீரர் இவர்தானாம் – வெளியான தகவல்

இப்படி இந்திய அணியின் வீரர்கள் தொடர்ச்சியாக காயமடைந்து வருவது அனைவரது மத்தியிலும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அணியில் இப்படி தொடர்ச்சியான மாற்றங்கள் நடைபெற்று வரும் வேளையில் நிலையான அணி இல்லாமல் இந்திய அணி வெற்றிக்காக தற்போது தவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement