டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக இடம்பிடிக்கப்போகும் வீரர் இவர்தானாம் – வெளியான தகவல்

Rohith 2
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது வங்கதேச நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணியானது இந்த ஒருநாள் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் வென்றுள்ள வேளையில் அடுத்ததாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை டிசம்பர் 10-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

IND vs BAN Rohit Sharma Liton Das

- Advertisement -

இந்த போட்டிக்குப் பின்னர் இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது டிசம்பர் 14-ஆம் தேதி துவங்குகிறது. இந்நிலையில் இந்த வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏனெனில் நடைபெற்று முடிந்த இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது கட்டை விரலில் காயம் அடைந்த ரோகித் சர்மா மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து விலகி தற்போது மும்பை திரும்பியுள்ளார். அவரது காயத்தின் தன்மையை கணித்த பிறகே அவர் டெஸ்ட் தொடரில் பங்கேற்பாரா? இல்லையா? என்பது குறித்து உறுதியான தகவல் கிடைக்கும்.

abhimanyu easwaran 1

தற்போது வரை கிடைத்த தகவலின் அடிப்படையில் ரோகித் சர்மா டெஸ்ட் தொடரில் பங்கேற்பது சந்தேகம் ஆகியுள்ளது என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக ரோஹித் சர்மாவிற்கு பதிலாக அவரது இடத்தில் விளையாடப்போகும் வீரர் யார்? என்பது குறித்து எதிர்பார்ப்பது தற்போது அனைவரும் மத்தியில் எழுந்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் ஒருவேளை ரோகித் சர்மா டெஸ்ட் தொடரிலிருந்து விலகினால் அவருக்கு மாற்று வீரராக இந்திய ஏ அணியின் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் தான் களமிறக்கப்படலாம் என்று தெரிகிறது. ஏனெனில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இவர் இந்திய ஏ அணியின் கேப்டனாக இருந்து வங்கதேச ஏ அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2 போட்டியிலும் சதம் அடித்து மிகச் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார்.

இதையும் படிங்க : வீடியோ : அடப்பாவமே, கேட்ச் பிடிக்கும் போது ரத்தம் சொட்ட காயமடைந்து பற்களை இழந்த இலங்கை வீரர் – ரசிகர்கள் சோகம்

அதன் காரணமாக ரோஹித் சர்மாவிற்கு சரியான மாற்றுவீராக அவரே இருப்பார் என்கிற அடிப்படையில் ரோகித் சர்மாவிற்கு பதிலாக அவர் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement