
ஆர்.சி.பி அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜாஷ் ஹேசல்வுட்டுக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் தற்போது நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளை தவற விட்டுள்ளார். அவரது காயம் குணமடைந்து விரைவில் ஆர்.சி.பி அணிக்கு திரும்புவார் என்று செய்திகள் வெளியாகி வந்தாலும் அவர் இல்லாமல் ஆர்.சி.பி அணி பந்துவீச்சில் பெரிய பின்னடைவை சந்திக்கும் என்பதே பலரது பேச்சாகவும் இருந்தது. ஆனாலும் அவரது இடத்தை நிரப்ப போதுமான வீரர்களை ஆர்.சி.பி அணியின் நிர்வாகம் தயார்படுத்தி வைத்திருந்தது.
அந்த வகையில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த 2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் போட்டிகளின் மினி ஏலத்தில் வாங்கப்பட்ட நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளரான ஜேக்கப் டபி நேற்று நடைபெற்ற 2026 ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் அணிக்காக அறிமுக வேகப்பந்து வீச்சாளராக களமிறங்கி விளையாடினார். ஜாஷ் ஹேசல்வுட்டின் இடத்தை புதிய வீரராக வந்து நிரப்புவது அவ்வளவு எளிது கிடையாது.
ஆனால் நேற்றைய போட்டியில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜேக்கப் டஃபி தொடர்ந்து 4 ஓவர்களை வீசி அதில் 22 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். போட்டியின் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதால் அவருக்கு நேற்றைய போட்டியின் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்து தனது அனுபவம் குறித்து பேசிய ஜேக்கப் டபி கூறுகையில் :
உண்மையிலேயே இது மிகச் சிறப்பான ஒரு அனுபவமாக இருக்கிறது. பெங்களூரு குறித்தும் ஆர்.சி.பி அணி குறித்தும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். தற்போது அந்த அணியில் இருந்து என்னுடைய பயணம் துவங்குவதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த போட்டியில் எங்களுடைய அணி வீரர்கள் அனைவருமே மிகச் சிறப்பாக செயல்பட்டனர். இந்த ஆட்டத்தில் என்னுடைய திட்டமெல்லாம் மிகவும் சிம்பிளாக வைத்துக் கொண்டேன்.
இதையும் படிங்க : பிரிப்பேர் பண்ணாம வரவே மாட்டேன்.. இத்தனை வருஷம் என் சக்சஸ்க்கு காரணம் இதுதான் – விராட் கோலி பேச்சு
அதாவது புதிய பந்தில் போட்டியின் ஆரம்பத்திலேயே விக்கெட்டை வீழ்த்த வேண்டும். அதிர்ஷ்டவசமாக ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் தொடர்ந்து கிடைத்ததால் கேப்டன் தொடர்ந்து நான்கு ஓவரையும் வீச வைத்தார். அதன்பிறகு நான் மைதானத்தில் இருந்து ஓய்வறைக்கு திரும்பி விட்டேன். ஒட்டுமொத்தமாக இந்த நாள் மிகச் சிறப்பாக இருந்தது என ஜேக்கப் டபி கூறியது குறிப்பிடத்தக்கது.