பிரிப்பேர் பண்ணாம வரவே மாட்டேன்.. இத்தனை வருஷம் என் சக்சஸ்க்கு காரணம் இதுதான் – விராட் கோலி பேச்சு

Virat Kohli
- Advertisement -

ஆர்.சி.பி அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு பின்னர் கிட்டதட்ட ஓராண்டுகள் கழித்து டி20 போட்டிகளில் நேற்று பங்கேற்று விளையாடி இருந்தார். அந்த வகையில் நேற்று சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து பெங்களூரு அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

120% பங்களிப்பை வழங்க இன்றும் உழைக்கிறேன் : விராட் கோலி

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 201 ரன்களை குறிக்க பின்னர் 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 38 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர் என ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் குவித்து வழக்கம் போல் அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பிறகு தனது இந்த சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய விராட் கோலி கூறுகையில் : உண்மையிலேயே டி20 போட்டிகளில் ஓராண்டிற்கு பிறகு நான் விளையாடுவதில் மகிழ்ச்சி. சமீபத்தில் ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடியதால் அந்த முமென்டம் இங்கும் உதவியுள்ளது. நான் களத்தில் சிறப்பாக செயல்படுவதற்கு பின்னால் மிகப்பெரிய கடின உழைப்பு இருக்கிறது. உடல் ரீதியாக பிட்னஸில் அதிகளவில் கவனம் செலுத்துவதோடு தற்போது தேவையான ஓய்வையும் எடுத்துக் கொள்வதால் என்னால் புத்துணர்ச்சியாக இருக்க முடிகிறது.

கடந்த 15 ஆண்டுகளாக நான் நிறைய கிரிக்கெட் விளையாடி உள்ளேன். தற்போது ஒருவகையான போட்டியில் மட்டுமே விளையாடுவதால் நல்ல ஓய்வு கிடைக்கிறது. அப்படி ஓய்வு கிடைக்கும் போது என்னுடைய பிட்னஸில் கவனம் செலுத்துவதோடு மட்டுமின்றி ஆட்டத்திலும் மேம்பாட்டை கொண்டு வர முடிகிறது. நான் எப்பொழுது களத்திற்கு விளையாட வந்தாலும் 120% என்னுடைய பங்களிப்பை வழங்க வேண்டும் என்று தயாராகி வருவேன்.

- Advertisement -

இதையும் படிங்க : பேட்டிங் செய்ய பிட்ச் நல்லா இருந்தாலும் நாங்க தோக்க இதுவே காரணம் – இஷான் கிஷன் பேட்டி

எந்த ஒரு தொடருக்கும் முறையற்ற பயிற்சியின்றி வரமாட்டேன். ஏனெனில் ஒவ்வொரு போட்டியுமே நான் வெற்றி பெற என்னுடைய பயிற்சி சரியாக செய்து வருகிறேன். அதுவே இத்தனை ஆண்டு காலம் என்னை நல்ல ஒரு வீரராக வைத்து வருகிறது இனியும் அது தொடரும் என விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement