IND vs NZ : இப்படியா ரன்னை வாரி குடுப்பீங்க. இந்திய அணியால் சிதறடிக்கப்பட்ட நியூசி பவுலர் – மோசமான சாதனை

Jacob-Duffy
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு ஆட்டங்களின் முடிவில் இந்திய அணி 2 போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது.

Suryakumar rohit sharma

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது தற்போது இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியானது ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரது சிறப்பான துவக்கம் காரணமாக அதிரடியாக ரன்களை குவித்தது. குறிப்பாக பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கிய ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் சதம் அடித்து அசத்தினர். முதல் விக்கெட்டிற்கு இவர்கள் இருவரும் 212 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பலமான அடித்தளத்தை அமைக்க பின்னர் வந்த இந்திய வீரர்களும் அதிரடி காட்டினர்.

Jacob Duffy 1

அதன் காரணமாக இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 385 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் ரோகித் சர்மா 101 ரன்கள், சுப்மன் கில் 112 ரன்கள், ஹார்திக் பாண்டியா 54 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது பந்துவீசிய நியூசிலாந்து அணியின் வேகப்பந்துச்சாளரான ஜேக்கப் டப்பி ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மோசமான சாதனைக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார். அந்த வகையில் இன்றைய போட்டியில் 10 ஓவர்கள் வீசிய அவர் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தாலும் 100 ரன்களை வாரி வழங்கியிருந்தார்.

இதையும் படிங்க : எதுவும் கேரண்டி இல்ல, தேர்தல் செய்தி உண்மை தான் – இந்தியாவுக்காக விளையாடும் கம்பேக் தேதியை அறிவித்த ஜடேஜா

இப்படி ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஓவர்கள் பந்து வீசி 100 ரன்கள் கொடுத்த பவுலர்களின் பட்டியலில் இவர் 15-வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த வீரராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த எம்.எல் லீவிஸ் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது 386 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement