அவரோட விளையாடுவது உண்மை தானான்னு கிள்ளிப் பாக்குறேன்.. கங்குலியை புன்னகைக்க வைத்த ஆஸி வீரர் பேட்டி

Jack Frazer
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 32வது லீக் போட்டியில் குஜராத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி தோற்கடித்தது. ஏப்ரல் 17ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் சுமாராக விளையாடி 89 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் தங்களுடைய குறைந்தபட்ச ஐபிஎல் ஸ்கோரை பதிவு செய்த குஜராத் மோசமான சாதனையும் படைத்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக ரசித் கான் 31 ரன்கள் எடுக்க டெல்லி சார்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதன் பின் 90 ரன்களை சேசிங் செய்த டெல்லிக்கு ஜேக் ப்ரேஷர்-மெக்குர்க் 20, அபிஷேக் போரேல் 15, கேப்டன் ரிஷப் பண்ட் 16* ரன்கள் அடித்து 18.5 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் குஜராத் சார்பில் அதிகபட்சமாக சந்திப் வாரியர் 2 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை.

- Advertisement -

புன்னகைத்த கங்குலி:
முன்னதாக இந்த வருடம் 22 வயதாகும் ஆஸ்திரேலிய வீரர் ஜேக் ப்ரேஷர்-மெக்குர்க் டெல்லி அணிக்காக அறிமுகமானார். அந்த வாய்ப்பில் லக்னோவுக்கு எதிரான தன்னுடைய அறிமுகப் போட்டியின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்த அவர் இப்போட்டியிலும் தனது முதல் பந்திலேயே மைதானத்திற்கு நேராக அட்டகாசமான சிக்சரை அடித்து அசத்தினார்.

அதை பெவிலியினில் இருந்து பார்த்த டெல்லி அணியின் இயக்குனர் சௌரவ் கங்குலி புன்னகைத்து பாராட்டினார். இந்நிலையில் டெல்லியின் பயிற்சியாளராக இருக்கும் தங்களுடைய நாட்டின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்குடன் சேர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடும் நம்ப முடியாத வாய்ப்பு கிடைத்துள்ளதாக ஜேக் ப்ரேஷர்-மெக்குர்க் தெரிவித்துள்ளார். அதனால் தன்னைக் கிள்ளி பார்ப்பதாகவும் தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ரன்ரேட்டை எங்களுக்கு சாதகமாக கொண்டு வருவதற்காக அதிரடியான துவக்கத்தை கொடுக்க முயற்சித்தேன். நல்ல ஃபார்மில் நீங்கள் பயணிக்கும் போது அதை நீண்ட காலம் தொடர முயற்சிக்க வேண்டும். இந்த விளையாட்டே வேடிக்கையானது. இரண்டாவது இன்னிங்ஸில் பனி வந்ததால் எங்களுடைய பேட்டிங் எளிதாக மாறியது. நான் அதிகமான சுழல் பந்துகளை எதிர்கொள்ளவில்லை. ரிக்கி பாண்டிங்குடன் சேர்ந்து விளையாடுவதை நம்ப முடியவில்லை”

இதையும் படிங்க: இந்த நிலைமையில் இருந்து எங்களால் மீண்டு வரமுடியும்.. ஒரு முடிவோட இருக்கோம் – ஆர்.சி.பி கோச் பேட்டி

“அதற்காக உங்களை நீங்களே கிள்ளிக் கொள்ள வேண்டும். அவருடைய கடைசி டெஸ்ட் போட்டியில் இது பற்றி நேதன் லயன் பேசியது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. தற்போது அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றுள்ளதால் எங்களுடைய தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. மெதுவாக துவங்கிய நாங்கள் தற்போது எங்களுடைய சொந்த ஆட்டத்தை விளையாட வேண்டும். ஆக்ரோஷமாக பேட்டிங் செய்வதற்கு எனக்கு 2வது அழைப்பு தேவையில்லை. அது என்னுடைய இயல்பான ஆட்டமாகும்” என்று கூறினார்.

Advertisement