இந்த நிலைமையில் இருந்து எங்களால் மீண்டு வரமுடியும்.. ஒரு முடிவோட இருக்கோம் – ஆர்.சி.பி கோச் பேட்டி

Andy-Flower
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் பெங்களூரு ராயல் சேலஞ்சர் அணியானது இதுவரை தாங்கள் விளையாடியுள்ள 7 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்று இரண்டு புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தினை பிடித்து பரிதாப நிலையை சந்தித்துள்ளது.

மேலும் இனிவரும் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் கிட்டத்தட்ட பெங்களூரு அணியின் பிளே ஆப் வாய்ப்பு தற்போதைக்கு கனவாக மாறியுள்ளது.

- Advertisement -

இதனால் பெங்களூரு அணியின் ரசிகர்கள் அனைவரும் வருத்தத்தில் இருக்கின்றனர். கடந்த 17 ஆண்டுகளாகவே ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது இம்முறையாவது சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மீண்டும் ஒருமுறை படும் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி பெங்களூரு அணி ஏமாற்றத்தை அளித்துள்ளது.

குறிப்பாக பெங்களூரு அணியின் பேட்டிங் வரிசை சிறப்பாக இருந்தாலும், பந்துவீச்சு யூனிட் பெங்களூர் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் பெங்களூரு அணி என்னதான் பெரியா ஸ்கோரை அடித்தாலும் சிராஜ் முதல் யாஷ் தயாள் வரை யாருமே சரியாக பந்து வீசுவது கிடையாது.

- Advertisement -

இதன் காரணமாக பெங்களூரு அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தொடர் தோல்விகள் குறித்து பேசிய ஆர்.சி.பி அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்டி பிளவர் கூறுகையில் : நிச்சயம் இந்த இடத்தில் இருப்பது கடினமாக உள்ளது. குறிப்பாக நாங்கள் இந்த இடத்தில் நிற்போம் என்று யோசிக்கவில்லை. ஆனாலும் இந்த தோல்விகளிலிருந்து எங்களால் நிச்சயம் திரும்பி வர முடியும்.

இதையும் படிங்க : டி20 உலககோப்பையில் ஹார்டிக் பாண்டியாவின் இடத்திற்கு வரவுள்ள சி.எஸ்.கே வீரர் – ரோஹித் சர்மா வைத்துள்ள செக்

இனிவரும் ஒவ்வொரு போட்டிகளும் எங்களுக்கு நாக் அவுட் போட்டிகள் தான். எனவே ஒவ்வொரு ஆட்டத்தையும் செமி பைனல் போன்று விளையாடி மீண்டு வருவோம். இந்த சரிவில் இருந்து மீண்டு வரும் நம்பிக்கை எங்களிடம் இருக்கிறது. இந்த தொடரின் முதல் பாதி எங்களுக்கு சரியாக செல்லவில்லை என்றாலும் இரண்டாவது பாதியில் எங்களால் பலமாக மீண்டு வர முடியும் என ஆன்டி பிளவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement