அதுல கொஞ்சமும் மாறாத சஞ்சு சாம்சனை 2023 உ.கோ அணியில் கழற்றி விட்டது சரி தான்.. ஸ்ரீசாந்த் அதிரடி பேட்டி

Sreesanth 3
- Advertisement -

ஆசிய கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இருப்பினும் இந்த 3 தொடர்களில் எதிலுமே கேரளாவை சேர்ந்த நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் இடம் பெறாதது ஒரு தரப்பு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடம் ஏமாற்றத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் 2015இல் அறிமுகமாகி 2வது போட்டியை 2019இல் விளையாடிய அவலத்தை சந்தித்த அவர் 2021 வரை நிலையற்ற வாய்ப்புகளை பெற்றதில்லை. இருப்பினும் தொடர்ந்து மனம் தளராமல் ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த அவர் 2022ஆம் ஆண்டு கிடைத்த நிலையான வாய்ப்புகளில் முதல் முறையாக டி20 கிரிக்கெட்டில் அரை சதமடித்து ஒருநாள் போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார்.

- Advertisement -

ஸ்ரீசாந்த் அதிரடி:
அதனால் குறைந்தபட்சம் பேக்-அப் வீரராக உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் தடுமாறும் சூரியகுமாருக்கு வாய்ப்பு கிடைத்த நிலையில் 55 என்ற நல்ல சராசரியை கொண்டிருந்தும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று ரசிகர்கள் தேர்வுக்குழுவை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சன் கழற்றி விடப்பட்டது சரிதான் என்று அவருடைய மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீசாந்த் அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார்.

ஏனெனில் பொறுப்புடன் விளையாடுங்கள் என்று சுனில் கவாஸ்கர் போன்ற நிறைய ஜாம்பவான்கள் தொடர்ந்து சொல்லியும் அதை கேட்காத சஞ்சு சாம்சன் எப்போதுமே சற்று திமிரான போக்கில் விளையாடி தொடர்ச்சியாக சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியதில்லை என்று ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். இது பற்றி யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இது சரியான முடிவு என்று நினைக்கிறேன். ஏனெனில் முதலில் ஒரு வீரர் தன்னை பற்றி நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்”

- Advertisement -

“மேலும் கவாஸ்கர், ரவி சாஸ்திரி போன்ற ஜாம்பவான்கள் அவரை உயர்தரமான வீரராக மதிப்பீடுகின்றனர். அதற்கான திறமை அவரிடம் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவருடைய அணுகுமுறை சரியில்லை. அதாவது பிட்ச் மற்றும் சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் விளையாடுங்கள் என்று பலர் சொல்லியும் அவர் அதை கேட்பதில்லை. குறிப்பாக அவர் தன்னுடைய அணுகுமுறையை மாற்றுவதில்லை”

இதையும் படிங்க: கேப்டனாக தோனி, விராட் கோலி கூட செய்யாத சாதனையை மொஹாலி மைதானத்தில் நிகழ்த்திய – கே.எல் ராகுல்

“இத்தனைக்கும் அவரை பார்க்கும் போதெல்லாம் சஞ்சு பொறுமையாக காத்திருந்து சூழ்நிலை மற்றும் பவுலர்களை பார்த்து விளையாடுமாறு நான் அவரிடம் கூறுவேன். மேலும் நான் உட்பட நிறைய மலையாள மக்கள் அவருக்கு வாய்ப்பு கிடைக்க ஆதரவு கொடுக்கிறோம். இருப்பினும் அயர்லாந்து, இலங்கை அவர்களின் வாய்ப்பு பெற்ற அவர் 10 வருடங்களாக ஐபிஎல் தொடர்களில் விளையாடுகிறார். ஆனால் அதில் எப்போதுமே அவர் தொடர்ச்சியாக சிறந்து செயல்பட்டதில்லை” என்று கூறினார்.

Advertisement