அதெல்லாம் நம்ம பிறப்பிலேயே இல்ல, நமக்கு வரவும் வராது – கேஎல் ராகுலுக்கு டிகே பதிலடி, நடந்தது என்ன

- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடி வரும் இந்தியா முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை கோட்டை விட்ட நிலையில் அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் களமிறங்கியுள்ளது. 2023 ஜூன் மாதம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்ல 2 – 0 (2) என்ற கணக்கில் இத்தொடரை வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள இந்தியா டிசம்பர் 14ஆம் தேதியன்று துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து முதல் நாள் முடிவில் 278/6 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக புஜாரா 90 ரன்களும் ரிஷப் பண்ட் அதிரடியாக 46 ரன்களும் எடுத்த நிலையில் களத்தில் ஷ்ரேயஸ் ஐயர் 82* ரன்களுடன் உள்ளார்.

KL Rahul Shakib Al Hasan

- Advertisement -

முன்னதாக சமீப காலங்களில் தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்துவது தோல்விகளைக் கொடுப்பதால் தற்சமயத்தில் இங்கிலாந்து விளையாடும் அதிரடியான அணுகு முறையை இந்திய அணியும் பின்பற்ற வேண்டுமென்று உலக அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அந்த நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற அதிரடியாக விளையாட வேண்டியது அவசியம் என்று தெரிவித்த தற்காலிக கேப்டன் கேஎல் ராகுல் இங்கிலாந்தை விட இந்தியா தங்களுடைய ஸ்டைலில் இத்தொடரில் அதிரடியாக விளையாடும் என்று போட்டி துவங்குவதற்கு முன்பாக கூறினார்.

பிறப்பிலேயே இல்ல:

ஆனால் சாதாரண வீரராகவே பேட்டிங்கில் தடவக்கூடிய நீங்கள் எப்படி அதிரடியாக விளையாட போகிறீர்கள் என்று அவரை ரசிகர்கள் கிண்டலடித்தார்கள். அந்த நிலைமையில் முதல் நாளன்று கேப்டன் ரோகித் சர்மா இல்லாத நிலைமையில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய அவர் கொஞ்சமும் மாறாமல் அதே தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தி 22 (54) ரன்களில் அவுட்டானார். அதனால் இதற்குப் பெயர் தான் அதிரடியாக விளையாடுவதா? எல்லாம் வாய்ப்பேச்சு மட்டும் தான் களத்திலும் செயலிலும் எதுவும் கிடையாது என்று ரசிகர்கள் அவரை வழக்கம் போல சமூக வலைதளங்களில் கலாய்த்து தள்ளினார்கள்.

Ben Stokes

இந்நிலையில் ராகுல் மட்டுமல்லாமல் இந்திய அணியாலும் எப்போதுமே அதிரடியாக விளையாட முடியாது ஏனெனில் அது நமது பிறப்பிலேயே இல்லை என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். அதற்கான காரணத்தை விளக்கி அவர் பேசியது பின்வருமாறு. “என்னைப் பொறுத்த வரை ஏற்கனவே கூறியது போல் சட்டோகிராம் போன்ற சில மைதானங்களில் எவ்வளவு தான் அதிரடியாக விளையாடினாலும் இறுதியில் உங்களுக்கு முடிவு கிடைக்காது. ஏனெனில் இது போன்ற மைதானங்கள் நேரம் செல்ல செல்ல வேகம் குறைந்து விடும். அதில் தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தாமல் போனால் தவறுகள் செய்ய நேரிடலாம். மேலும் உங்களது குணாதிசயம் வலுவாக இருந்தால் விக்கெட்டில் நிலைத்திருக்க உங்களுக்கு பெரிய நுட்பம் தேவையில்லை”

- Advertisement -

“அத்துடன் அதிரடியான அணுகு முறையுடன் விளையாட முயற்சிப்பவர்கள் குறிப்பாக இந்திய அணியால் தற்போது இங்கிலாந்து போல விளையாட முடியாது. ஏனெனில் அது நமது டிஎன்ஏவின் ஒரு பகுதியாக இருப்பதில்லை. அனேகமாக இத்தொடரை எப்படியாவது வென்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்ல வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ள காரணத்தால் ஒருவேளை கேஎல் ராகுல் அப்படி சொல்லியிருக்கலாம். ஏனெனில் இந்த 2 போட்டிகளும் நமக்கு மிகவும் முக்கியம். இப்போட்டியில் அவர்கள் ஆக்சிலேட்டரை அழுத்தி ஸ்கோரிங் ரேட்டை தள்ள விரும்புகிறார்கள்”

DInesh Karthik Commentrator

“ஆனால் பிட்ச் மெதுவாக இருப்பதால் இன்று அவர்களால் அதை செய்ய முடியவில்லை. அத்துடன் அதை செய்வதற்கு அனைவரும் சேர்ந்து வர வேண்டும். அந்த அணுகு முறையில் விளையாடுவதற்கு சில மாறுபட்ட வீரர்களும் உங்களுக்கு தேவைப்படுகிறார்கள்” என்று கூறினார். அதாவது இங்கிலாந்து போல அதிரடியாக விளையாட நினைத்தாலும் சில சமயங்களில் சட்டோகிராம் போன்ற மெதுவாக இருக்கும் பிட்ச்களில் எதுவும் செய்ய முடியாது என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சிறப்பாக செயல்பட்டும் 3 வருடமாக புஜாராவை தொடரும் சோகம் – ஆனாலும் திலிப் வெங்சர்க்காரை முந்தி வரலாற்று சாதனை

மேலும் அதிரடி அணுகு முறையில் விளையாடுவதற்கு ஒரு சிலரால் முடியாது என்று தெரிவிக்கும் அவர் நிறைய வீரர்கள் இணைந்து விளையாடினால் தான் சாதிக்க முடியும் என்று கூறியுள்ளார். குறிப்பாக தற்போதைய அணியில் ரிஷப் பண்ட் தவிர்த்து பெரும்பாலான வீரர்கள் தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்துவது போல இந்தியர்களின் பிறப்பிலேயே அதிரடியாக விளையாடும் டிஎன்ஏ இல்லை என்று அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.

Advertisement