சிறப்பாக செயல்பட்டும் 3 வருடமாக புஜாராவை தொடரும் சோகம் – ஆனாலும் திலிப் வெங்சர்க்காரை முந்தி வரலாற்று சாதனை

Cheteswar Pujara
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடி வரும் இந்தியா முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் அவமான தோல்வியை சந்தித்த நிலையில் அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கியுள்ளது. குறிப்பாக 2023 ஜூன் மாதம் லண்டன் ஓவலில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல 2 – 0 (2) என்ற கணக்கில் இத்தொடரை கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இந்தியா டிசம்பர் 14ஆம் தேதியன்று துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து முதல் நாளில் 278/6 ரன்கள் சேர்த்துள்ளது. இந்தியாவுக்கு கேப்டன் கேஎல் ராகுல் 22, சுப்மன் கில் 20, விராட் கோலி 1 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

SHreyas Iyer vs BAN

- Advertisement -

இருப்பினும் மிடில் ஆர்டரில் அதிரடி காட்டிய ரிஷப் பண்ட் 46 ரன்களும் செட்டேஸ்வர் புஜாரா 90 ரன்களும் ஷ்ரேயஸ் ஐயர் 82* ரன்களும் எடுத்து சரிவை சரி செய்தார்கள். இப்போட்டியில் முதல் விக்கெட் விழுந்ததும் களமிறங்கிய நட்சத்திர சீனியர் வீரர் புஜாரா தமக்கே உரித்தான பாணியில் நங்கூரமாக பேட்டிங் செய்து ரன்களை குவித்தார். அதிலும் குறிப்பாக 112/4 என தடுமாறிய போது ஷ்ரேயாஸ் ஐயருடன் 5வது விக்கெட்டுக்கு 149 ரன்கள் அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் தன்னுடைய அனுபவத்தை வெளிப்படுத்தி அட்டகாசமாக பேட்டிங் செய்தார்.

தொடரும் சோகம்:

சொல்லப்போனால் ஷ்ரேயஸ் ஐயர் கூட 2 முறை அதிர்ஷ்டத்தால் தப்பிய நிலையில் எவ்வித அதிர்ஷ்டமும் இல்லாமல் முழுக்க முழுக்க திறமையை வெளிப்படுத்தி விளையாடிய புஜாரா 90 ரன்களை தொட்ட போது 3 வருடத்திற்கு பின் சதமடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் மீண்டும் துரதிஷ்டவசமாக போல்டாகி சென்றார். கடைசியாக கடந்த 2019 பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் சதமடித்து 500க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக விராட் கோலி தலைமையில் டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைக்க தொடர் நாயகன் விருது வென்று கருப்பு குதிரையாக செயல்பட்ட அவர் அதன் பின் கடந்த 3 வருடங்களாக அடுத்த சதத்தை அடிக்க முடியாமல் தவிக்கிறார்.

Pujara County

அதனாலேயே கடந்த பிப்ரவரி மாதம் சொந்த மண்ணில் நடைபெற்ற இலங்கை தொடரின் போது அதிரடியாக நீக்கப்பட்ட அவர் அதற்காக மனம் தளராமல் இங்கிலாந்தின் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் சதங்களையும் இரட்டை சதங்களையும் விளாசினார். அதனால் அதிரடியாக நீக்கிய அதே தேர்வுக்குழு தாமாக முன்வந்து கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ரத்து செய்யப்பட்ட 5வது போட்டியில் மீண்டும் தேர்வு செய்தது. அதில் 13, 66 என நல்ல ரன்களை குவித்த அவர் கடந்த 3 வருடங்களில் சதமடிக்கவில்லை என்றாலும் இதே போல நிறைய நல்ல இன்னிங்ஸ்களை விளையாடி வருகிறார்.

- Advertisement -

குறிப்பாக கடந்த 2019இல் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்டில் 43/2 என இந்தியா தடுமாறிய போது 55 ரன்கள் எடுத்த அவர் சிட்னியில் நடைபெற்ற 3வது டெஸ்டில் 50 மற்றும் 77 என 2 இன்னிங்ஸ்களிலும் அபாரமான ரன்களை குவித்து போட்டியை டிரா செய்ய உதவினார். மேலும் மறக்க முடியாத காபா வெற்றியில் அதிக பந்துகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய அவர் அதன்பின் சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 73/4 என இந்தியா தடுமாறிய போது 73 ரன்கள் குவித்தார்.

Pujara

மொத்தத்தில் கடைசியாக கடந்த 2019இல் சிட்னியில் 193 ரன்கள் குவித்து சதமடித்திருந்த அவர் அதன் பின் 3 வருடங்களில் 51 இன்னிங்ஸில் சதமடிக்கவில்லை என்றாலும் 14 அரை சதங்களை அடித்துள்ளார். அதனால் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வரும் அவர் இப்போட்டியில் குவித்த 90 ரன்களையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த 8வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற திலீப் வெங்சர்க்கார் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்தார்.

இதையும் படிங்க: கடைசில இப்படி எங்களை ஏமாத்திடீங்களே? புஜாராவின் மீது செல்லமாக கோபித்துக்கொண்ட ரசிகர்கள் – என்ன நடந்தது?

அந்த பட்டியல்: 
1. சச்சின் டெண்டுல்கர் : 15921
2. ராகுல் டிராவிட் : 13265
3. சுனில் கவாஸ்கர் : 10122
4. விவிஎஸ் லக்ஷ்மன் : 8781
5. வீரேந்திர சேவாக் : 8503
6. விராட் கோலி : 8075*
7. சௌரவ் கங்குலி : 7212
8. செட்டேஸ்வர் புஜாரா : 6882*
9. திலீப் வெங்சர்க்கார் : 6868

Advertisement