கடைசில இப்படி எங்களை ஏமாத்திடீங்களே? புஜாராவின் மீது செல்லமாக கோபித்துக்கொண்ட ரசிகர்கள் – என்ன நடந்தது?

- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 14-ஆம் தேதி சட்டகிராம் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் குவித்துள்ளது.

KL Rahul Shakib Al Hasan

- Advertisement -

ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டம் இழக்காமல் 82 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்த போட்டியில் துவக்க வீரர்களாக களம் இறங்கிய ராகுல் மற்றும் கில் ஆகியோர் சிறப்பாக விளையாடிய வேளையில் அணியின் எண்ணிக்கை 41 ரன்களில் இருந்த போது சுப்மன் கில் 20 ரன்களில் முதல் விக்கட்டாக ஆட்டம் இழந்து வெளியேறினார்.

பின்னர் அணியின் எண்ணிக்கை 45-ஆக இருந்தபோது கே.எல் ராகுல் 22 ரன்களிலும், அணியின் எண்ணிக்கை 48-ஆக இருந்தபோது விராட் கோலி ஒரு ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினர். இதன் காரணமாக இந்திய அணி 48 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்தது. பின்னர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட் 45 பந்துகளில் 46 ரன்களை அதிரடியாக விளாச இந்திய அணியானது அதிரடியான ரன் குவிப்பில் ஈடுபட்டது.

pujara

பின்னர் அணியின் எண்ணிக்கை 112-ஆக இருக்கும் போது ரிஷப் பண்டும் ஆட்டம் இழந்து வெளியேற 4 விக்கெட்டுகளுக்கு 112 ரன்கள் என்று இந்திய அணி தவித்தது. அப்போது கைகோர்த்த புஜாரா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரது ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 149 ரன்கள் சேர்த்து அசத்தியது.

- Advertisement -

இந்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய புஜாரா 90 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை விளையாடி இருந்தாலும் அவர் மீது தற்போது ரசிகர்கள் செல்லமாக கோபித்துக் கொண்டுள்ளனர். அதற்கு காரணம் யாதெனில் பந்துவீச்சுக்கு சாதகமான இந்த மைதானத்தில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா நிச்சயம் சதம் அடிப்பார் என்று அனைவரும் ஆவலாக எதிர்பார்த்தனர்.

இதையும் படிங்க : க்ளீன் போல்ட் ஆகியும் விக்கெட்டில் இருந்து தப்பித்த ஷ்ரேயாஸ் ஐயர் – அம்பயர் முதல் அனைவரும் திகைப்பு

இவ்வேளையில் 90-ரன்களில் அவர் போல்டானது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது. சதம் அடித்து ஆட்டம் இழந்து இருக்கலாமே என்று தங்களது செல்லமான வருத்தத்தை ரசிகர்கள் பகிர்ந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement