க்ளீன் போல்ட் ஆகியும் விக்கெட்டில் இருந்து தப்பித்த ஷ்ரேயாஸ் ஐயர் – அம்பயர் முதல் அனைவரும் திகைப்பு

Shreyas-Iyer
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது டிசம்பர் 14-ஆம் தேதி சட்டகிராம் மைதானத்தில் துவங்கியது. அதன்படி இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் சேர்த்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்ததும் அவருடன் துவக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் மிகச் சிறப்பான துவக்கத்தை அளித்தார். இருவரும் மிகவும் நேர்த்தியாக ரன்களை சேர்த்து வந்த வேளையில் முதல் விக்கெட்டாக சுப்மன் கில் 20 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

- Advertisement -

பின்னர் கே.எல் ராகுலும் 22 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேற விராத் கோலி ஒரே ரன்னில் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார். இருந்தாலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட் 45 பந்துகளில் 46 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார். அதேபோன்று சத்தீஸ்வர் புஜாரா 90 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

பின்னர் ஆட்டநேர இறுதியில் ஷ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களுடன் ஆட்டமிடக்காமலும், போட்டியின் கடைசி பந்தில் அக்சர் பட்டேல் 14 ரன்களில் ஆட்டம் இழந்தனர். இப்படி முதல் நாள் இந்திய அணியின் கலவையான ஆட்டம் காரணமாக 90 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் குவித்து முதல் நாள் ஆட்டத்தை முடிவு செய்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி 112 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தவித்த வேளையில் புஜாரா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரது ஜோடி ஐந்தாவது விக்கெட்க்கு 139 ரன்களை சேர்த்து அசத்தியது. இந்நிலையில் இந்த போட்டியின் போது வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் வீசிய 84-ஆவது ஓவரில் கிளீன் போல்ட் ஆன ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டம் இழக்காமல் அந்தப் விக்கெட்டில் இருந்து தப்பித்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றது.

இதையும் படிங்க : தந்தையின் 34 ஆண்டுகால சாதனையை சமன் செய்த அர்ஜுன் டெண்டுல்கர் – புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா?

அப்போது 77 ரன்களில் களத்தில் இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் பந்து தெளிவாக ஸ்டெம்பில் பட்டாலும் பெயில்ஸ் கீழே விழாததால் அவர் ஆட்டம் இழக்கவில்லை என்று அம்பயர் அறிவித்தார். இது குறித்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement