தந்தையின் 34 ஆண்டுகால சாதனையை சமன் செய்த அர்ஜுன் டெண்டுல்கர் – புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா?

Arjun-Tendulkar
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ரஞ்சிக்கோப்பை தொடரானது இந்த ஆண்டு 2022-2023 ஆம் ஆண்டு சீசன் நேற்று பிப்ரவரி 13-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனானது பிப்ரவரி 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ள வேளையில் நேற்றைய முதல் போட்டியாக கோவா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது.

Arjun Tendulkar 2

- Advertisement -

இந்த ரஞ்சித் தொடரில் மும்பை அணியில் இருந்து விலகிய இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் கோவா அணிக்காக விளையாடினார். ஏற்கனவே மும்பை அணியில் பல்வேறு வீரர்கள் இடம் பிடித்திருப்பதால் தனக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கருதிய அர்ஜுன் டெண்டுல்கர் கோவா அணிக்காக இடம்பெயர்ந்தது மட்டுமின்றி நேற்றைய போட்டியில் அவர் பிளேயிங் லெவனின் இடம்பெற்றும் விளையாடினார்.

அதன்படி நேற்று காலை 9.30 மணி அளவில் துவங்கிய இந்த போட்டியில் முதலில் விளையாடிய கோவா அணியானது தொடக்கத்திலேயே 59 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை கோவா அணி இழக்கவே ஒரு கட்டத்தில் ஐந்து விக்கெட்டுகளை இழந்த வேளையில் ஏழாவது வீரராக அர்ஜுன் டெண்டுல்கர் களம்புந்தார். அவர் களமிறங்கியது முதலே எதிரில் இருந்த பிரபு தேசாயுடன் கைகோர்த்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

Arjun Tendulkar 1

அப்படி பாட்னர்ஷிப் அமைத்த அவர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் முறையாக ரஞ்சி போட்டியில் விளையாடும் இவர் எதிரில் இருந்த வீரருடன் அட்டகாசமான பார்ட்னர்ஷிப்பை அமைத்து ரன்களை சேர்த்துக் கொண்டே வந்தார். அப்படி நேற்றைய போட்டியில் அறிமுகமான அவர் தனது முதல் ஆட்டத்திலேயே ஏழாவது விக்கெட்டில் களம் இறங்கி ரஞ்சிக்கோப்பையில் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

- Advertisement -

இறுதியில் 120 ரன்களுடன் வெளியேறிய அர்ஜுன் டெண்டுல்கர் தான் அறிமுகமான முதல் போட்டியிலேயே தனது தந்தையின் 34 வருட சாதனையை சமன் செய்துள்ளார். அந்த வகையில் கடந்த 1988-ஆம் ஆண்டு மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான ரஞ்சி போட்டியில் மும்பை அணிக்காக அறிமுகமாகிய சச்சின் டெண்டுல்கர் நான்காவது வீரராக களமிறங்கி 100 ரன்களை விளாசி அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியிருந்தார்.

இதையும் படிங்க : வீடியோ : மேஜிக் பந்தில் காலியான விராட் கோலி, அவுட்டான வெறியில் செய்த வேலை – 2வது இன்னிங்ஸில் சம்பவம் காத்திருக்கிறதா?

அதனை தொடர்ந்து தற்போது 34 ஆண்டுகள் கழித்து தனது தந்தையின் சாதனையை சமன் செய்த அர்ஜுன் டெண்டுல்கர் ஏழாவது வீரராக களம் இறங்கி ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் 120 ரன்களை சேர்த்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement