மேஜிக் பந்தில் காலியான விராட் கோலி, அவுட்டான வெறியில் செய்த வேலை – 2வது இன்னிங்ஸில் சம்பவம் காத்திருக்கிறதா?

- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 14ஆம் தேதியன்று துவங்கியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இத்தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் வென்றால் தான் 2023 ஜூன் மாதம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் பைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிய இந்தியா சட்டோகிராம் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற பேட்டிங் செய்வதாக அறிவித்தது. கேப்டன் ரோஹித் சர்மா இல்லாத நிலைமையில் பேட்டிங்கை துவங்கிய இந்தியாவுக்கு சுப்மன் கில் 20, கேப்டன் கேஎல் ராகுல் 22 என தொடக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதை விட அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்ததால் 48/3 என தடுமாறிய இந்தியாவை புஜாாராவுடன் இணைந்து 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றிய ரிசப் பண்ட் தமக்கே உரித்தான அதிரடி ஸ்டைலில் 5 பவுண்டரி 2 சிக்ஸருடன் 46 (45) ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் புஜாராவுடன் மீண்டும் இணைந்து நங்கூரத்தை போட்டு 5வது விக்கெட்டுக்கு 149 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை மீட்டெடுத்தார்.

- Advertisement -

வெறித்தன பயிற்சி:
குறிப்பாக வங்கதேசத்துக்கு எதிராக 5வது விக்கெட்டுக்கு அதிக பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடியாக சாதனை படைத்த இவர்களில் புஜாரா கடைசி நேரத்தில் 90 (203) ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். இறுதியில் அக்சர் பட்டேல் கடைசி பந்தில் 14 ரன்களில் அவுட்டானாலும் ஷ்ரேயாஸ் ஐயர் 82* ரன்களுடன் களத்தில் இருப்பதால் முதல் நாள் முடிவில் இந்தியா 278/6 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக இப்போட்டியில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தைஜூல் இஸ்லாம் வீசிய மாயாஜால சுழலில் அவுட்டாகி சென்றார்.

அதனால் எப்படி அவுட்டானோம் என்ற வகையில் அதிர்ச்சியான ரியாக்சன் கொடுத்த அவர் ரிவ்யூ எடுத்த போதிலும் தப்பிக்க முடியாமல் அவுட்டாகி சென்று பெவிலியனில் ஏமாற்றத்துடன் அமர்ந்திருந்தார். மேலும் தாம் அவுட்டானதை தொலைக்காட்சியில் மீண்டும் பார்த்த அவர் தன் மீது மிகவும் அதிருப்தி அடைந்தார். அதனால் நிற்காமல் போட்டி நடந்து கொண்டிருக்கும் போதே தேனீர் இடைவெளிக்கு பின் இந்திய நெட் பந்து வீச்சாளர் சௌரப் குமாரை அழைத்துச் சென்ற அவர் போட்டி முடியும் வரை தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டார்.

- Advertisement -

சமீப காலங்களாகவே டைஜூல் இஸ்லாம் போன்ற இடது கை ஸ்பின்னர்களிடம் தடுமாறும் கதைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே இடது கை ஸ்பின்னரான சௌரப் குமாரை ஸ்பெஷலாக அழைத்துச் சென்று விராட் கோலி பயிற்சி எடுத்ததாக தெரிகிறது. குறிப்பாக இதே போட்டியில் 2வது இன்னிங்ஸில் டைஜூல் இஸ்லாம் மட்டுமல்லாமல் சாகிப் அல் ஹசனையும் சிறப்பாக எதிர்கொண்டு முதல் இன்னிங்ஸில் விட்ட ரன்களை மீண்டும் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைப்பதற்காக இந்த தீவிரமான பயிற்சியில் அவர் ஈடுபட்டதாக இறுதியில் அணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

முன்னதாக கடந்த 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக சந்தித்த விமர்சனங்களை சமீபத்திய ஆசிய கோப்பையில் அடித்து நொறுக்கி பார்முக்கு திரும்பிய விராட் கோலி டி20 உலக கோப்பையில் அபாரமாக செயல்பட்டு பழைய பார்முக்கு திரும்பினார். அதிலும் குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் 1021 நாட்கள் கழித்து சதமடித்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 1214 நாட்கள் கழித்து நடைபெற்று முடிந்த வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சதமடித்து முழுமையான பார்முக்கு திரும்பினார்.

இதையும் படிங்க: அப்ரிடி, ரோஹித்துக்கு அப்புறம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அற்புதமான சாதனையை நிகழ்த்திய – ரிஷப் பண்ட்

அந்த பார்மை தொடர விரும்பும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்து வருகிறார். எனவே இப்போட்டியின் 2வது இன்னிங்ஸ் அல்லது 2வது டெஸ்ட் போட்டியில் சதமடித்து அந்த மோசமான கதைக்கும் இந்த வருடத்துடன் விராட் கோலி முற்றுப்புள்ளி வைப்பார் என்று அவரது ரசிகர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

Advertisement