அப்ரிடி, ரோஹித்துக்கு அப்புறம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அற்புதமான சாதனையை நிகழ்த்திய – ரிஷப் பண்ட்

Pant
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டி போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 14-ஆம் தேதி இன்று சட்டகிராம் மைதானத்தில் துவங்கிய நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்யும் என இந்திய அணி கேப்டன் கே.எல் ராகுல் அறிவித்தார்.

IND-vs-BAN

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது இன்றைய முதல்நாள் ஆட்ட நேர இறுதியில் 90 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக புஜாரா 90 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

அவர்களை தவிர்த்து ரிஷப் பண்ட் 46 ரன்களிலும், கே.எல் ராகுல் 22 ரன்களிலும், சுப்மன் கில் 20 ரன்களிலும், விராட் கோலி ஒரு ரன்னிலும், அக்சர் பட்டேல் 14 ரன்களிலும் ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனையை படைத்து தற்போது மீண்டும் தனது திறனை உலகிற்கு வெளிக்காட்டி இருக்கிறார்.

pant 1

அதன்படி தனது கரியரில் 54-ஆவது டெஸ்ட் இன்னிங்ஸை விளையாடும் ரிஷப் பண்ட் இன்றைய போட்டியில் அடித்த இரண்டு சிக்ஸர்களோடு 50 சிக்ஸர்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளாசியுள்ளார். இதற்கு முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 சிக்ஸர்களை விளாசிய வீரர்களின் பட்டியலில் சாகித் அப்ரிடி 46 இன்னிங்ஸ்களில் 50 சிக்ஸர்களையும், ரோஹித் சர்மா 51 இன்னிங்ஸ்களில் 50 சிக்ஸர்களை விளாசியுள்ளனர்.

- Advertisement -

அவர்களுக்கு அடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 54 இன்னிங்ஸ்களில் 50 சிக்ஸர்களை விளாசி இந்த பட்டியலில் ரிஷப் பண்ட் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். மேலும் இன்றைய போட்டியில் அவர் அடித்த 46 ரன்கள் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தோனிக்கு அடுத்து நான்காயிரம் ரன்களை விக்கெட் கீப்பராக அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் ரிஷப் பண்ட் நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : விராட் கோலிக்கு ஒரு நியாயம் ரோஹித்துக்கு ஒரு நியாயமா? இந்தியா மோசமான டீம் இல்லை – விமர்சனங்களுக்கு கைஃப் பதிலடி

அது மட்டுமின்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் விளையாடிய கடைசி ஏழு இன்னிங்ஸ்களில் அவருடைய சராசரியாக 89 ரன்கள் அமைந்துள்ளது. இது அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு ஏற்ற வீரர் என்பதை வெளிக்காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement