முட்டாள்தனமா பேசாதீங்க, எப்போதும் இது அழியாது – விமர்சகர்களுக்கு ரோஹித் சர்மா கொடுத்த பதிலடி

Rohith-1
- Advertisement -

நூற்றாண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட டெஸ்ட் போட்டிகள் 5 நாட்கள் கடந்தும் முடிவுகளை கொடுக்காமல் பெரும்பாலும் டிராவில் முடிவடைந்ததால் ஒரு நாளில் முடிவை காணும் வகையில் உருவாக்கப்பட்ட ஒருநாள் கிரிக்கெட் ரசிகர்களின் பலத்த வரவேற்ப்பை பெற்றது. அதை மையப்படுத்தி கிரிக்கெட்டின் சாம்பியன் தீர்மானிக்கும் உலக கோப்பை அறிமுகப்படுத்தப்பட்டு 50 ஓவர்களாக குறைக்கப்பட்ட ஒருநாள் கிரிக்கெட் 90களில் உச்சக்கட்ட வளர்ச்சி கண்டு நம்பர் ஒன் இடத்தை பிடித்தது. ஆனால் அதன்பின் உருவாக்கப்பட்ட 20 ஓவர் போட்டிகளும் அதைப்பார்த்து உருவாக்கப்பட்ட ஐபிஎல் போன்ற பிரீமியர் லீக் டி20 தொடர்களும் அசுர வளர்ச்சி கண்டு இன்று டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பின்னுக்குத் தள்ளி நம்பர் ஒன் இடத்தை தனதாக்கியுள்ளது.

- Advertisement -

இதனால் அனைத்துப் போட்டிகளிலும் விளையாட வேண்டியுள்ள வீரர்கள் பணிச்சுமையை நிர்வகிக்க தரத்திற்காக டெஸ்ட், பணத்துக்காக டி20 என்ற வகையில் ஒருநாள் கிரிக்கெட்டை புறக்கணிக்க துவங்கியுள்ளனர். குறிப்பாக 31 வயதிலேயே இங்கிலாந்து நட்சத்திரம் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்னது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. மேலும் அதிரடியை பரிசளிக்கும் டி20 மற்றும் தரத்தை பரிசோதிக்கும் டெஸ்ட் ஆகிய இரண்டுக்கும் மத்தியில் சம்பந்தமில்லாமல் நிற்கும் ஒருநாள் போட்டிகளை பேசாமல் நிறுத்திவிடலாம் என்று சில முன்னாள் வீரர்கள் வெளிப்படையாகவே கூறுகின்றனர்.

ரோஹித் ஆதரவு:
இருப்பினும் ஆரம்பத்தில் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் விளையாட வேண்டும் என்ற அடிப்படை இலக்கணத்தை கொண்ட ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னும் சுவாரசியம் இருப்பதாகத் தெரிவிக்கும் ஒரு தரப்பினர் கிரிக்கெட்டின் சாம்பியனை 50 போட்டிகளை மையமாக கொண்ட உலக கோப்பையிலிருந்து தான் இப்போதும் தேர்வு செய்வதாக பதிலடி கூறுகின்றனர். எனவே அது தொடர்ந்து நடைபெற ஒருநாள் போட்டிகள் அவசியமென்று நிறைய ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் விமர்சனத்தை மிஞ்சும் ஆதரவு கொடுக்கின்றனர். அந்த வரிசையில் இணைந்துள்ள இந்தியாவின் கேப்டன் ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட் அழிவதாக கூறுவது முட்டாள்தனமான கருத்து என்று காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

Rohith

ஒருநாள் கிரிக்கெட்டை வைத்துதான் தம்மை போன்ற ஒருவர் இந்த உலகிற்கு அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “நான் ஒருநாள் கிரிக்கெட் வாயிலாகத்தான் பெயர் பெற்றேன். எனவே அது அழிவதாக பேசப்படும் பேச்சுகள் முட்டாள்தனமானது. ஆரம்ப காலங்களில் இதே விமர்சகர்கள் டெஸ்ட் கிரிக்கெட் பற்றி பேசினார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை எந்த வகையான போட்டியாக இருந்தாலும் கிரிக்கெட் முக்கியமானதாகும். நான் எப்போதும் ஒருநாள் அல்லது டி20 அல்லது டெஸ்ட் கிரிக்கெட் முடிந்துவிட்டதாக கூற மாட்டேன். சொல்லப்போனால் அதுபோல் மற்றொரு வகையான கிரிக்கெட் இருந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்”

- Advertisement -

“ஏனெனில் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதே எனது சிறுவயது ஆசையாகும். மேலும் நாங்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடும் போதெல்லாம் எதிர்பார்ப்புடன் வரும் ரசிகர்களால் மைதானங்கள் நிரம்பி வழிகின்றன. எனவே ஒருவர் ஒரு வகையான கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுவது அவருடைய சொந்த முடிவாகும். ஆனால் என்னை பொறுத்தவரை அனைத்து வகையான கிரிக்கெட்டும் முக்கியமாகும்” எனக்கூறினார்.

rohith

அவர் கூறுவது போல டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டை விட ஒருநாள் போட்டிகளால் தான் 3 இரட்டை சதங்கள், அதிகபட்ச ஸ்கோர் (264), ஒரே உலக கோப்பையில் 5 சதங்கள் என ஏராளமான உலக சாதனைகளை படைத்து 9376 ரன்களையும் 29 சதங்கள் விளாசிய ரோகித் சர்மா போன்ற ஒரு தரமான வீரர் கிரிக்கெட்டுக்கு கிடைத்தார் என்பதில் சந்தேகமில்லை. இத்துடன் ஐபிஎல் போன்ற எத்தனை டி20 தொடர்கள் வந்தாலும் நாட்டுக்காக விளையாடுவதே இந்திய வீரர்களை பொருத்தவரை கௌரவமாக நினைப்பதாக தெரிவித்த அவர் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“சர்வதேச கிரிக்கெட்டை விட லீக் தொடர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது. வருங்காலங்களில் இன்னும் 10 புதிய பிரீமியர் லீக் தொடர்கள் வரும்போது கிரிக்கெட் வீரர்கள் எதில் விளையாட முடிவெடுப்பார்கள் என்பதும் தெரியாது. ஆனால் தற்போதைய நிலைமையில் இந்திய கிரிக்கெட்டின் நிலை பழைய மாதிரி தான் உள்ளது”

இதையும் படிங்க : IND vs ZIM : என் உழைப்புக்கு கிடைத்த பரிசு, தோனியுடன் கம்பேர் பண்ணாதீங்க – கேஎல் ராகுல் நெகிழ்ச்சியுடன் பேசியது இதோ

“நாங்கள் ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் மட்டும் விளையாடுகிறோம். இதில் விளையாடுவதால் நிறைய வீரர்கள் கண்டறியப்படுகின்றனர். அதை வைத்து நாங்கள் பெஞ்சில் உள்ள வீரர்களையும் தரமானவர்களாக உருவாக்க நினைக்கிறோம். அதனால்தான் ஜிம்பாப்வே தொடரில் சபாஸ் அஹமத், ராகுல் திரிபாதி போன்ற வீரர்கள் முதல் முறையாக விளையாட தேர்வாகியுள்ளனர்” என்று கூறினார்.

Advertisement