IND vs ZIM : என் உழைப்புக்கு கிடைத்த பரிசு, தோனியுடன் கம்பேர் பண்ணாதீங்க – கேஎல் ராகுல் நெகிழ்ச்சியுடன் பேசியது இதோ

- Advertisement -

ஜிப்பாவ்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. தலைநகர் ஹராரேயில் நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 18-ஆம் தேதியான இன்று துவங்கியது. முன்னதாக சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடந்த ஒருநாள் தொடரில் இளம் வீரர்களை வைத்து 3 – 0 (3) என்ற கணக்கில் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒயிட்வாஷ் வெற்றியை பதிவு செய்த ஷிகர் தவான் இந்த தொடருக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் மற்றொரு நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் காயத்திலிருந்து குணமடைந்ததால் கடைசி நேரத்தில் ஷிகர் தவானுக்கு பதில் அவர் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

KL Rahul Shikhar Dhawan

- Advertisement -

மறுபுறம் கேப்டனாக அறிவிக்கப்பட்ட சீனியர் ஷிகர் தவான் துணை கேப்டனாக செயல்படுவார் என்று பிசிசிஐ நன்றியில்லாமல் அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்டது நிறைய முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது. இருப்பினும் 35 வயதை கடந்துள்ள ரோகித் சர்மாவுக்கு அடுத்தபடியாக அடுத்த தலைமுறை கேப்டனாக ராகுலை வளர்க்க பிசிசிஐ நினைப்பதால் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் கடந்த சில மாதங்களாக காயத்தால் விலகியிருந்த அவர் ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பு தயாராக வேண்டும் என்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

லேட்டஸ்ட் நாயகன்:
கடந்த 2019 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் காயத்துடன் சதமடித்து வெற்றி பெற வைத்து வெளியேறிய ஷிகர் தவானுக்கு பதில் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற்ற ராகுல் அவரைவிட அபாரமாக செயல்பட்டு 3 வகையான இந்திய அணியிலும் அந்த இடத்தை தனதாக்கியுள்ளார். மேலும் 2019 முதல் பேட்டிங்கில் தடுமாறும் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரை விட பேட்டிங்கில் அசத்தும் இவர் இந்தியாவின் லேட்டஸ்ட் ரன் மெஷினாக பேட்டிங் துறையின் முக்கிய வீரராக தன்னை நிரூபித்துள்ளார்.

KL Rahul

ஐபிஎல் தொடரில் பஞ்சாப், லக்னோ அணிகளில் கேப்டனாக செயல்பட்ட அனுபவத்தை கொண்டுள்ள காரணத்தால் சமீப காலங்களில் அவரிடம் இந்தியாவை வழிநடத்தும் பொறுப்பும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக பேட்டிங்கில் இந்தியாவுக்கு ஆற்றிய பங்கை அணி நிர்வாகம் மறக்காமல் இந்த கேப்டன்ஷிப் பொறுப்பாக கொடுத்துள்ளதாக தெரிவிக்கும் ராகுல் இது தம்முடைய உழைப்புக்கு கிடைத்த பரிசு என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

- Advertisement -

உழைப்பின் பரிசு:
இது பற்றி ஜிம்பாப்வே தொடருக்கு முன் அவர் பேசியது பின்வருமாறு. “நான் 2 மாதங்கள் அணியை விட்டு விலகியிருந்தேன். ஆனாலும் கடந்த 2 வருடங்களாக நாட்டுக்காக நான் என்ன செய்தேன் என்பதை அவர்கள் மறக்கவில்லை. இத்தகைய சூழலில்தான் வீரர்கள் உண்மையாக செழித்து செயல்படுவார்கள். அணி நிர்வாகத்தின் இதுபோன்ற ஆதரவால் கிடைக்கும் சூழ்நிலைகள் ஒரு சிறந்த வீரர் மிகச்சிறந்த வீரராக உருவாவதற்கு உதவும். இதனால் நிறைய போட்டிகளில் விளையாடி வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்க முடியும்”

rahul 2

“ஒரு வீரருக்கு தேர்வுக்குழு, பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ஆகியோரின் ஆதரவு முக்கியமானதாகும். இந்த ஆதரவு உங்களுக்கு தன்னம்பிக்கையையும் தெளிவையும் கொடுத்து உங்களுக்கு வேண்டிய அம்சத்தில் முழு கவனத்தை செலுத்த உதவுகிறது. மேலும் விளையாட்டில் காயம் என்பது எனக்கு மட்டுமல்ல அனைவருக்குமே சகஜமானது. நீண்ட பயணத்தில் அதுவும் ஒரு அங்கமாக இருக்கும் நிலையில் அதிலிருந்து நீங்கள் நல்லதை எடுத்துக் கொள்ள வேண்டும். 2 மாதங்களாக அணியிலிருந்து விலகியிருந்த நான் தற்போது மீண்டும் இணைந்து இதர வீரர்களுடன் மனம்விட்டு மகிழ்ந்து பேசியுள்ளேன்” எனக்கூறினார்.

கம்பேர் பண்ணாதீங்க:
அதேபோல் மகத்தான கேப்டன்கள் எம்எஸ் தோனி, ரோகித் சர்மா ஆகியோருடன் தமை ஒப்பிட்டு பேசும் அளவுக்கு தகுதியானவன் கிடையாது என்று தெரிவிக்கும் கேஎல் ராகுல் ஜாம்பவான்களான அவர்களது வழியை பின்பற்றுவதாக பெருமையுடன் கூறியுள்ளார். இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “இங்கே நான் மற்றொருவரை போல் இருக்க முடியாது. அவ்வாறு இருக்க வேண்டுமென நினைத்தால் எனக்கும் அணிக்கும் நேர்மையுடன் நடந்து கொள்ள முடியாது. எனவே அனைவரையும் போல நானும் நானாக இருக்க விரும்புகிறேன்”

Dhoni

“மேலும் நான் எப்போதும் எம்எஸ் தோனி போன்றவர்களுடன் என்னை ஒப்பிடுவது கிடையாது. ஏனெனில் நாட்டுக்காக அவர்களின் சாதனைகளும் சரித்திரங்களும் அபாரமானது. அவருடைய பெயரின் அருகில் எந்த பெயரும் இருக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. கேப்டனாக இது என்னுடைய 2வது தொடராகும். தோனியின் கீழ் விளையாடியுள்ள நான் அவரிடமிருந்து நிறைய கற்றுள்ளேன். எனவே அவரைப் போன்ற மகத்தான கேப்டன்களிடமிருந்து கற்ற பாடத்தை இந்த தொடரில் பயன்படுத்த உள்ளேன்” என்று கூறினார்.

Advertisement