இந்தியாவை அவங்க சொந்த ஊரில் சாய்ப்பது கஷ்டம் தான் ஏன்னா அவர மாதிரி ஒரு பிளேயர் எங்ககிட்ட இல்ல – சோயப் அக்தர் வெளிப்படை

Shoaib Akhtar 8
- Advertisement -

ஐசிசி 2023 உலகக் கோப்பை தொடரில் 2011 போல இந்தியா கோப்பையை வெல்லுமா என்று எதிர்பார்ப்புக்கு நிகராக பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிராக அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் வெற்றி வாகை சூடுமா என்ற எதிர்பார்ப்பும் இந்திய ரசிகர்களிடம் உச்சமாக இருக்கிறது. மறுபுறம் 1992 முதல் இதுவரை நடைபெற்ற 7 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளதால் உலகக் கோப்பையை வெல்லாவிட்டாலும் பரவாயில்லை இம்முறை அனைத்து தோல்விகளுக்கும் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து பழி தீர்க்க வேண்டும் என்பதே பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

அந்த சூழ்நிலையில் அடிக்கடி கேப்டன்களை மாற்றுவது, சோதனைகள் என்ற பெயரில் சொதப்பல்களை அரங்கேற்றுவது போன்ற செயல்களை செய்து தங்களை தங்களை அழித்துக் கொண்டிருக்கும் இந்தியாவை நிச்சயம் இம்முறை நன்கு செட்டிலாகியுள்ள பாகிஸ்தான் தோற்கடிக்கும் என்று அந்நாட்டை சேர்ந்த முன்னாள் வீரர்கள் எச்சரித்து வருகின்றனர். அந்த வரிசையில் 2011 உலகக்கோப்பை தோல்விக்கு இம்முறை அகமதாபாத் மைதானத்தில் இந்தியாவை தோற்கடித்து பழி தீர்ப்போம் என்று கடத்த சில தினங்களுக்கு முன்பாக சோயப் அக்தர் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

கஷ்டம் தான்:
இந்நிலையில் இந்தியாவை அவர்களுடைய சொந்த மண்ணில் தோற்கடிப்பது கிட்டத்தட்ட அசாத்தியமான ஒன்று என தெரிவிக்கும் சோயப் அக்தர் தங்களுடைய அணியில் ஹர்திக் பாண்டியா போன்ற வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் இல்லாதது பின்னடைவாக என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். அதே போல கிட்டத்தட்ட தங்கள் நாட்டைப் போன்ற கால சூழ்நிலைகளை கொண்ட இந்தியாவில் பாகிஸ்தானை வீழ்த்துவதும் கடினம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“பாகிஸ்தான் ஒரு வேகப்பந்து ஆல் ரவுண்டர் இல்லாமல் தடுமாறப் போகிறது என்று நினைக்கிறேன். இருப்பினும் இந்திய மண்ணில் பாகிஸ்தான் கோப்பையை வெல்லும் அணியாக கால் வைக்கும் என்பதை நான் நேர்மையாக சொல்கிறேன். அதே சமயம் ஆசிய கோப்பையிலும் அவர்கள் சாம்பியன் பட்டம் வெல்லும் அணியாக இருக்கிறார்கள். மேலும் ஆசிய கண்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மிகவும் வலுவான அணிகளாகும்”

- Advertisement -

“குறிப்பாக இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்பது கிட்டத்தட்ட அசாத்தியமற்றதாகும். அதே போல இந்தியாவில் பாகிஸ்தானை தோற்கடிப்பது என்பது அசாத்தியற்றதிற்கு நிகரானதாகும். ஏனெனில் இரு அணிகளிடமும் நல்ல வேகப்பந்து வீச்சு இருக்கிறது. அத்துடன் பாகிஸ்தானின் பேட்டிங் முன்பு தடுமாற்றமாக இருந்தது. தற்போது அவர்களுடைய பேட்டிங் வரிசை செட்டிலாகியுள்ளது”

இதையும் படிங்க: இந்த திட்டம் ஜெயிக்க கூடாதுன்னு கடவுள வேண்டிக்கிறேன் – இலங்கை மற்றும் வங்கதேசத்தை விமர்சித்த வெங்கடேஷ் பிரசாத்

“அதனால் அவர்களால் பெரிய ஸ்கோர் அடித்து சேசிங் செய்ய முடியும் என்ற நம்பிக்கை தெரிகிறது. குறிப்பாக எளிதாக விக்கெட்டை கொடுக்க விரும்பாத அவர்கள் எந்த இலக்கையும் துரத்துவதற்கு தயாராக இருக்கின்றனர். எனவே அவர்கள் இந்தியாவுக்கு சவாலை கொடுக்கும் அளவுக்கு நல்ல அணியாக இருக்கின்றனர்” என்று கூறினார். அவர் கூறுவது போல பாகிஸ்தான் அணியில் பவுலிங் சிறப்பாக இருந்தாலும் பாண்டியா போன்ற வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் இல்லை என்பது பின்னடைவாகவே பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement