தோனி இல்ல.. 2007 டி20 உ.கோ ஃபைனலில் ஜோஹிந்தரை பந்து வீச சொன்னது அவர் தான்.. யுவராஜ் பேட்டி

Yuvraj Singh 3
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் எம்எஸ் தோனி மறக்க முடியாத மகத்தான கேப்டனாக போற்றப்படுகிறார். ஏனெனில் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத போதிலும் 2007ஆம் ஆண்டு பொறுப்பேற்ற அவர் டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் ட்ராபி ஆகிய 3 விதமான ஐசிசி உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக ரிக்கி பாண்டிங் போன்ற யாருமே படைக்க முடியாத தனித்துவமான உலக சாதனையை படைத்துள்ளார்.

குறிப்பாக தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் அவருடைய கேப்டன்ஷிப் மிகவும் தைரியமானதாகவும் சாதுரியமானதாகவும் இருந்தது. அதிலும் குறிப்பாக மாபெரும் ஃபைனலில் 158 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய மிஸ்பா-உல்-ஹக் இந்தியாவின் வெற்றிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக பேட்டிங் செய்தார்.

- Advertisement -

தோனியின் முடிவல்ல:
அதனால் கடைசி ஓவரில் பாகிஸ்தானின் வெற்றிக்கு வெறும் 13 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட போது முந்தைய ஓவரில் ரன்களை வாரி வழங்கியிருந்த ஹர்பஜனுக்கு பதிலாக ஜோஹிந்தர் சர்மாவை அனுபவமில்லாத போதிலும் தோனி நம்பி பயன்படுத்தினார். அப்போதும் மிஸ்பா சிக்சரை பறக்க விட்டதால் தடுமாறிய ஜோகிந்தர் சர்மாவிடம் அருகே சென்று தோனி சில ஆலோசனைகளை வழங்கினார்.

அந்த உத்வேகத்துடன் தொடர்ந்து ஜோஹிந்தர் பந்து வீசிய நிலையில் மிஸ்பா தேவையின்றி ஸ்கூப் ஷாட் அடித்த நிலையில் ஸ்ரீசாந்த் கேட்ச் பிடித்ததால் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றதை மறக்க முடியாது. இந்நிலையில் அந்த பரபரப்பான போட்டியில் ஜோஹிந்தர் சர்மா பந்து வீசும் முடிவை கேப்டன் தோனி எடுக்கவில்லை என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

- Advertisement -

மாறாக ஹர்பஜன் சிங் தான் தமக்கு பதிலாக ஜோஹிந்தர் பந்து வீசட்டும் என்று பரிந்துரைத்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் பேசியது பின்வருமாறு. “அந்த போட்டியில் உண்மையாகவே கடைசி ஓவரை ஹர்பஜன் வீசுவதாக முடிவு எடுத்திருந்தோம். அதனால் தோனி மற்றும் நான் அவரிடம் சென்று உங்களிடம் இருக்கும் அனுபவத்திற்கு நீங்கள் தான் இந்த ஓவரை வீச வேண்டும் என்று சொன்னோம்”

இதையும் படிங்க: உண்மையிலேயே அந்த 2 டீமை ஜெயிக்குறது ரொம்ப கஷ்டம்ன்னு நெனைக்குறேன் – ஸ்டீவ் ஸ்மித் வெளிப்படை

“ஆனால் என்னுடைய கடந்த ஓவரில் 3 யார்கர் பந்துகளை முயற்சித்தும் மிஸ்பா 3 சிக்ஸர்களை அடித்ததால் ஏதேனும் வேகப்பந்து வீச்சாளருக்கு அந்த வாய்ப்பை கொடுங்கள் என்று ஹர்பஜன் எங்களிடம் தெரிவித்தார். எனவே தோனிக்கு அந்த ஐடியாவை ஹர்பஜன் சிங் தான் கொடுத்தார்” என்று கூறினார். முன்னதாக தோனியும் தாமும் நெருங்கிய நண்பர்கள் கிடையாது என்று தெரிவித்த யுவராஜ் சிங் கிரிக்கெட்டில் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற கட்டாயத்தில் ஒன்றாக அர்ப்பணிப்புடன் விளையாடியதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement