முதல்முறையாக முகமது ஷமி பவுலிங் பண்றத பார்த்து தோனி என்ன சொன்னாரு தெரியுமா? – இஷாந்த் சர்மா பகிர்ந்த தகவல்

Ishanth-Sharma
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகம்மது ஷமி கடந்த 2013-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமாகி இதுவரை 62 டெஸ்ட் போட்டிகள், 87 ஒருநாள் போட்டிகள் மற்றும் 23 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அது தவிர்த்து ஐபிஎல் தொடரிலும் 93 போட்டிகளை விளையாடி உள்ள இவர் இன்றளவும் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வருகிறார்.

Shami

- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் கூட முகமது ஷமி தனது அசத்தலான பந்துவீச்சை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் முறையாக இந்திய அணியின் நெட் பவுலிங் செக்ஷனில் இணைந்த முகமது ஷமி எவ்வாறு செயல்பட்டார் என்பது குறித்தும், அவரைக் கண்ட தோனி என்ன சொன்னார் என்பது குறித்தும் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. 2013-ஆம் ஆண்டு வாக்கில் இந்திய அணியின் கேப்டனாக தோனி இருந்தார்.

Shami 1

அப்போது நடந்த ஒரு நெட் பிராக்டீஸில் தான் முதல் முறையாக முகமது ஷமியை நான் பார்த்தேன். வழக்கமாக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தான் நல்ல வேகத்துடன் பந்து வீசுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அந்த வலைப்பயிற்சியில் ஷமி பந்துவீச ஓடி வரும்போது அவர் ஓடிவந்த விதம் சாதாரணமாக இருந்தாலும் அவரிடம் இருந்து வெளிவந்த வேகம் மிக அருமையாக இருந்தது. அதனை பார்த்து வியந்த நான் தோனியிடமும் அவரைப் பற்றி கூறினேன்.

- Advertisement -

உடனே தோனி என்னிடம் : அவரைப் பற்றி (முகமது ஷமி) நான் நிறைய கேள்வி பட்டுள்ளேன். இப்போதுதான் பார்க்கிறேன் “வாவ் என்ன அருமையாக பந்து வீசுகிறார்”, நிச்சயம் இவர் சிறந்த பவுலராக வலம் வருவார் என்று தன்னிடம் கூறியதாக இஷாந்த் சர்மா பகிர்ந்துள்ளார். அதேபோன்று முகமது ஷமி அதே ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஈடன் கார்டன் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அறிமுகமாகினார்.

இதையும் படிங்க : IND vs AUS : கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இருந்து விலகிய நட்சத்திர வீரர் – விவரம் இதோ

அந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை எடுத்ததோடு சேர்த்து முதல் போட்டியிலேயே ஒன்பது விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதுவும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அதன் பிறகு நாங்கள் இருவருமே நண்பர்கள் ஆகி விட்டோம். இன்றளவும் முகமது ஷமி மிகச் சிறப்பான பந்துவீச்சாளராக இருப்பதில் மகிழ்ச்சி என்று இஷாந்த் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement