IND vs AUS : கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இருந்து விலகிய நட்சத்திர வீரர் – விவரம் இதோ

Hazlewood
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணியானது இரண்டு போட்டிகளிலும் அசத்தலான வெற்றியை பெற்று தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

IND vs AUS

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான எஞ்சியுள்ள கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகள் வரும் மார்ச் ஒன்றாம் தேதி முதல் துவங்குகின்றன. இந்த எஞ்சியுள்ள தொடருக்கான கடைசி இரண்டு போட்டிகளின் இந்திய அணியையும் பிசிசிஐ தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின் மூலம் அறிவித்துவிட்டது.

இந்நிலையில் ஏற்கனவே இந்த தொடரில் பெரிய பின்னடைவை சந்தித்துள்ள ஆஸ்திரேலிய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசல்வுட் இந்த டெஸ்ட் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Hazlewood

இந்த டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறும் அவர் நாடு திரும்புகிறார் என்றும் ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளர் உறுதி செய்துள்ளார். ஏற்கனவே ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரரான மிட்சல் ஸ்டார்க் காயம் காரணமாக விளையாட முடியாமல் இருக்கும் வேளையில் தற்போது மற்றொரு நட்சத்திர வீரரான ஹேசல்வுட்டும் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளது அந்த அணிக்கு பெரிய பின்னடைவை தந்துள்ளது.

- Advertisement -

இந்திய அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாமல் இருந்த ஹேசல்வுட் நிச்சயம் கடைசி இரண்டு போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் குணமடைய இன்னும் சிறிது காலம் ஆகும் என்பதனால் முன்னெச்சரிக்கை காரணமாகவே இந்த தொடரில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : தங்களது டெஸ்ட் கேரியரில் முதல் முறையாக பரிதாபத்தை பதிவு செய்த கிங் கோலி – ஹிட்மேன் ரோஹித், இதை கவனிச்சிங்களா

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் போட்டியானது வரும் மார்ச் 1-ஆம் தேதி இந்தூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement