தங்களது டெஸ்ட் கேரியரில் முதல் முறையாக பரிதாபத்தை பதிவு செய்த கிங் கோலி – ஹிட்மேன் ரோஹித், இதை கவனிச்சிங்களா

rohith
Advertisement

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதி வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. சொந்த மண்ணில் நடைபெறும் அத்தொடரில் குறைந்தபட்சம் 3 போட்டிகளை வென்று ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் முனைப்புடன் களமிறங்கிய இந்தியா முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்திலும் 2வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. அதனால் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை தக்க வைத்துள்ள இந்தியா உலகின் நம்பர் ஒன் அனியான ஆஸ்திரேலியாவை அசால்டாக தோற்கடித்து தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை நிரூபித்துள்ளது.

மறுபுறம் 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களை சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியாவை இம்முறை அவர்களது சொந்த மண்ணில் தோற்கடிக்கும் முனைப்புடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா பிட்ச் எப்படி இருக்கும் என்பதை விமர்சித்த அளவுக்கு செயலில் செயல்படாமல் அடுத்தடுத்த படுதோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் 2004க்குப்பின் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை ஏற்கனவே கோட்டை விட்டுள்ள ஆஸ்திரேலியா குறைந்தபட்சம் அடுத்த 2 போட்டிகளில் வென்று ஒய்ட் வாஷ் தோல்வியை தவிர்த்து தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

பரிதாப அவுட்:
முன்னதாக டெல்லியில் நடைபெற்ற இத்தொடரின் 2வது போட்டியில் இந்திய பேட்டிங் துறையின் தூண்களாக முன்னாள் இந்நாள் கேப்டன்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் முறையே 44, 20 மற்றும் 32, 31 ரன்களை அடித்து முடிந்தளவுக்கு வெற்றியில் பங்காற்றினார்கள். குறிப்பாக தன்னுடைய சொந்த ஊரான டெல்லியில் சொந்த ரசிகர்களின் அமோக வரவேற்பில் களமிறங்கிய விராட் கோலி முதல் இன்னிங்ஸில் 44 ரன்கள் குவித்து அசத்தலாக பேட்டிங் செய்தும் நடுவரின் தவறான தீர்ப்பால் எல்பி டபிள்யு முறையில் ஆட்டமிழந்தார்.

அதே போல் 2வது இன்னிங்ஸில் 20 ரன்களை எடுத்திருந்த அவர் இளம் ஸ்பின்னர் டோட் முர்பியின் சுழல் பந்தை இறங்கி அடிக்க முயற்சித்தார். ஆனால் லைனை முற்றிலுமாக தவற விட்டு வெள்ளை கோட்டை விட்டு வெளியேறிய அவரை விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி கட்சிதமாக ஸ்டம்பிங் செய்தார். இதில் ஆச்சரியம் என்னவெனில் தன்னுடைய கேரியரில் முதல் முறையாக இப்போட்டியில் தான் விராட் கோலி ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்துள்ளார்.

- Advertisement -

கடந்த 2011ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் முதல் 174 இன்னிங்ஸில் ஒருமுறை கூட ஸ்டம்பிங் முறையில் அவுட்டாகவில்லை. இப்போட்டியில் தான் தன்னுடைய 175வது இன்னிங்ஸில் முதல் முறையாக ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். அவரை போலவே 2வது இன்னிங்ஸில் 115 ரன்கள் துரத்தும் போது அதிரடியாக 3 பவுண்டரி 2 சிக்ஸரை பறக்க விட்ட ரோஹித் சர்மா 31 (20) ரன்கள் எடுத்திருந்த போது துரதிஷ்டவசமாக ரன் அவுட்டானார்.

Rohit Sharma Run Out

- Advertisement -

குறிப்பாக 2 ரன்கள் எடுக்க முயற்சித்த போது தவறு செய்த அவர் அதை உணர்ந்தது மட்டுமல்லாமல் எதிர்புறம் 100வது போட்டியில் விளையாடிய புஜாரா ஏற்கனவே முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டானதால் 2வது இன்னிங்ஸில் நல்ல ரன்களை எடுக்கட்டும் என்ற சுயநலமற்ற எண்ணத்துடன் சிறந்த கேப்டனுக்கு அடையாளமாக ரன் அவுட்டாகி சென்றார். அதில் ஆச்சரியம் என்னவெனில் தனது கேரியரில் முதல் முறையாக இப்போட்டியில் தான் ரோகித் சர்மா ரன் அவுட்டானார்.

இதையும் படிங்க: 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய புஜாராவுக்கு – நன்றி மறவாமல் ஆஸ்திரேலிய அணியினர் கொடுத்த அன்பு பரிசு

கடந்த 2013இல் அறிமுகமான அவர் தனது முதல் 79 இன்னிங்ஸில் ஒருமுறை கூட ரன் அவுட்டாகாத நிலையில் முதல் முறையாக இந்த போட்டியில் தன்னுடைய 80வது இன்னிங்ஸில் ரன் அவுட்டாகியுள்ளார். மொத்தத்தில் இந்திய பேட்டிங் துறையின் இரட்டை குழல் துப்பாக்கிக்களாக கருதப்படும் விராட் கோலி ரோஹித் சர்மாவும் தங்களது கேரியரில் முதல் முறையாக ஒரே போட்டியில் ஒரே இன்னிங்ஸில் வித்தியாசமான வகையில் ரன் அவுட்டானது ரசிகர்களுக்கு வியப்பாக அமைந்தது.

Advertisement