ரவி சாஸ்திரியோட கோச்சிங் ஸ்டைல் இதுதான். நம்மள பைத்தியமாக்கிடுவாரு – மனம்திறந்த இஷாந்த் சர்மா

Ishant-and-Shastri
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி எவ்வாறு நிர்வாக பாணியை மேற்கொள்வார் என்பது குறித்து இந்திய அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி பிரபல விளையாட்டு நிறுவனத்தின் பிரத்யேக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா தனது வளர்ச்சியில் ரவி சாஸ்திரி அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்று கூறியுள்ளார்.

Ishant Sharma

- Advertisement -

மேலும் அவர் தொடர்ந்து கூறுகையில் : இந்திய கிரிக்கெட் அணியில் அவர் பயிற்சியாளராக இருக்கும்போது அணி வீரர்களிடம் இருந்து எவ்வாறு அவர்களது சிறந்த செயல்பாட்டை பெறுவது என்பதை ரவி சாஸ்திரி மிகத் தெளிவாக தெரிந்து வைத்திருந்தார். ஒரு அணியாக எங்களது வளர்ச்சியில் அவர் நிறைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். மோசமான போட்டியை நாங்கள் எதிர்கொண்டாலும் எப்போதும் நேர்மறையான விடயங்களையே சொல்லி எங்களை ஊக்கப்படுத்துவார்.

அதே போன்று அவருடைய மற்றொரு பலம் யாதெனில் ஒவ்வொரு வீரர்களிடம் இருந்தும் எவ்வாறு அவர்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டு வர முடியும் என்பது ரவி சாஸ்திரிக்கு தெரியும் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ரவி சாஸ்திரி தனிப்பட்ட முறையில் ஆலோசனைகளை வழங்கும்போது மிகவும் புண்படும் வகையில் பேசுவார். அதோடு பைத்தியக்காரத்தனமாக ஆக்கும் அளவிற்கு அவர் சில வார்த்தைகளை உதிர்ப்பார்.

ishanth 1

ஏனெனில் 100% இதுபோன்று கோபப்படுத்தினால் இஷாந்த் சர்மாவிடமிருந்து நல்ல ஆட்டம் வெளிவரும் என்று அவருக்கு தெரியும். அதனாலே இது போன்ற விடயங்களை செய்தார். நான் ஒரு போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டுமெனில் கோபப்பட வேண்டும் என்று அவருக்கு தெரியும். அதனால் அவர் என்னிடம் பேசும்போது என்னை கஷ்டப்படுத்தும் வகையிலும், குத்தும் வகையிலும் பேசுவார்.

- Advertisement -

இப்படி ஒவ்வொரு வீரரிடமும் எவ்வாறு சிறந்த செயல்பாட்டை வெளிக்கொணர முடியும் என்பது அவருக்கு தெரியும். அதே போன்று ஒரு தனி மனிதனாகவும், போட்டி முடிந்த பிறகும் அவர் முற்றிலும் மாறுபட்ட நபராக இருப்பார். ஒருவேளை நீங்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தால் கூட அவர் அடுத்த ஆட்டத்தில் கவனத்தில் செலுத்துமாறு கூறி ஊக்கப்படுத்துவார் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : என்னது ரிஷப் பண்ட் ரெடியாகி வர 2 வருஷம் ஆகுமா? முக்கிய தகவலை வெளியிட்ட – சவுரவ் கங்குலி

ரவி சாஸ்திரி பயிற்சியின் கீழ் தான் இஷாந்த் சர்மா தனது 100-ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இந்திய அணி சார்பாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 போட்டிகளில் விளையாடிய 2-ஆவது வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை கபில் தேவுக்கு அடுத்து படைத்தவர் இஷாந்த் சர்மா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement