4 ஓவரில் 50 ரன் கொடுத்தாங்கன்னு நினைக்காதீங்க, அந்த 3 பேர் தான் நம்மளோட வருங்காலம் – இளம் பவுலர்களை ஆதரித்த இசாந்த் சர்மா

Ishanth-1
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஜூலை மாதம் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் சுமாராக செயல்பட்ட புஜாரா கழற்றி விடப்பட்டு ஜெய்ஸ்வால், ருதுராஜ் ஆகிய இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் பந்து வீச்சு துறையில் முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோருக்கு பதிலாக முகேஷ் குமார் மற்றும் நவ்தீப் ஷைனி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அடுத்த 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் இதே போல வரும் காலங்களில் படிப்படியாக இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Mukesh-Kumar

- Advertisement -

குறிப்பாக முகமது ஷமிக்கு அடுத்தபடியாக வருங்கால வேகப்பந்து வீச்சாளரை உருவாக்கும் நோக்கத்தில் முகேஷ் குமார் இந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய 2 தொடர்களிலும் தேர்வாகி அசத்தியுள்ளார். கடந்த 2015 முதல் பெங்கால் அணிக்காக உள்ளூர் முதல் தர கிரிக்கெட்டில்விளையாடி வரும் அவர் 33 போட்டிகளில் 123 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் இந்த வருடம் முதல் முறையாக டெல்லி அணிக்காக அறிமுகமான அவர் 10 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை 10.52 என்ற எக்கனாமியில் எடுத்தார்.

வாருங்கால பவுலர்கள்:
அந்த வகையில் டி20 கிரிக்கெட்டில் சற்று தடுமாறினாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தும் அளவுக்கு திறமை கொண்டுள்ள அவரை சரியாக வழி நடத்தும் பட்சத்தில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர வருங்கால பவுலராக உருவெடுப்பார் என்று இசாந்த் சர்மா கூறியுள்ளார். அதே போல எக்ஸ்பிரஸ் வேகத்தில் வீசக்கூடிய உம்ரான் மாலிக் மற்றும் ஸ்விங் செய்து எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் திறமை கொண்ட இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷிதீப் சிங் ஆகியோரும் வருங்காலத்தில் இந்திய வேகப்பந்து வீச்சு கூட்டணியில் அசத்துவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தற்போதைய நிலைமையில் இந்த மூவருமே 4 ஓவரில் 50 ரன்களை கொடுப்பவர்களாக இருக்கிறார்களே என்று நினைக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளும் இஷாந்த் சர்மா சரியான பயிற்சியும் வழிகாட்டுதலும் இருந்தால் அசத்துவார்கள் என்று ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “உம்ரான் மாலிக்கிற்கு சரியான பயிற்சியும் ஆதரவும் கொடுத்தால் அவர் நமது நாட்டுக்காக நீண்ட காலம் சிறப்பாக செயல்படும் அளவுக்கு திறமை கொண்டுள்ளார். அவரை போலவே அர்ஷிதீப் சிங் திகழ்கிறார். அதே போல முகேஷ் குமாரின் பின்னணி கதை அதைப் பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை”

- Advertisement -

“ஆனால் நான் அவரை சாதாரணமாக இந்த இடத்திற்கு வந்தவராக பார்க்கவில்லை. நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வீசுமாறு சொன்னால் அதை அவரால் வீச முடியும். அவருக்கு அழுத்தமான சமயங்களில் சரியான ஆதரவு மட்டுமே தேவைப்படுகிறது. அதை மட்டும் நீங்கள் கொடுத்தால் எப்படி வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியும் என்பது அவருக்கு தெரியும். இந்த ஐபிஎல் தொடரில் அவர் கடினமான கடைசி கட்ட ஓவர்களை வீசியதால் ரன்களை வாரி வழங்கினார். இருப்பினும் அவர் வீசிய சூழ்நிலை அல்லது பேட்ஸ்மேன் பற்றி பார்க்காமல் அனைவருமே 4 ஓவரில் 50 ரன்கள் கொடுத்தார் என்று தான் நினைக்கின்றனர்”

Ishanth

“குறிப்பாக 8 விக்கெட்டுகளை இழந்த போது களத்தில் ரசல் இருந்தால் அவர் எதற்காக பயப்பட வேண்டும்? போன்ற சமயங்களில் நீங்கள் அவருக்கு எதிராக யார்கர் பந்தை கொஞ்சம் தவற விட்டாலும் சிக்ஸராக அடிப்பார். இது போன்ற அம்சங்களை யாரும் பார்ப்பதில்லை. எனவே முகேஷ் குமார் போன்ற வீரர்களை சரியாக வழி நடத்தினால் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக உருவெடுப்பார்” என்று கூறினார்.

இதையும் படிங்க:செலக்டர்ஸ் வேஸ்ட், தோத்தாலும் அந்த 3 கேள்விகளை கேட்காம மீண்டும் ரோஹித்தை ராஜாவாக்கிட்டாங்க – கவாஸ்கர் விமர்சனம்

முன்னதாக பும்ரா, சிராஜ் போன்ற அடுத்த தலைமுறை பவுலர்கள் வந்து விட்டதால் 105 போட்டிகளில் விளையாடிய இசாந்த் சர்மாவுக்கு இந்திய அணியில் வாய்ப்பு முடிந்து போனதாகவே பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement