செலக்டர்ஸ் வேஸ்ட், தோத்தாலும் அந்த 3 கேள்விகளை கேட்காம மீண்டும் ரோஹித்தை ராஜாவாக்கிட்டாங்க – கவாஸ்கர் விமர்சனம்

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஜூலை மாதம் அதன் சொந்த மண்ணில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி நிறைய விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நடைபெற்று முடிந்த 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் படுதோல்வியை சந்தித்தற்கு காரணமாக இருந்த பேட்டிங் துறையில் சொதப்பிய கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் தவறுகள் மூடி மறைக்கப்பட்டு புஜாராவை மட்டும் பலி கிடாவாக தேர்வுக்குழு கழற்றி விட்டுள்ளது. அத்துடன் டெஸ்ட் அணிக்கு ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட சர்பராஸ் கான் மீண்டும் புறக்கணிக்கப்பட்டு ஐபிஎல் தொடரில் அசத்திய ஜெய்ஸ்வால், ருதுராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

TEam India Rohit Sharma

- Advertisement -

முன்னதாக லண்டனில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆரம்பத்திலேயே டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்யும் வாய்ப்பைத் தேர்ந்தெடுக்காமல் அதை தவற விட்டார். அதை விட சுழலுக்கு சாதகமான ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையில் 5 பேர் இடது கை பேட்ஸ்மேன்களாக இருந்தும் தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினை அவர் தேர்ந்தெடுக்காதது தோல்விக்கு நேரடி காரணமானது.

மீண்டும் ராஜாவாக ரோஹித்:
அது போக டிராவிஸ் ஹெட்டுக்கு எதிராக ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசும் யுக்தியை கடைபிடிக்காத ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் சுமாராகவே இருந்தது. மேலும் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்திக்க கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் சுமாராக செயல்பட்டு முக்கிய காரணமாக அமைந்த அவர் இந்த ஃபைனலில் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சொதப்பியது தோல்வியை கொடுத்தது. அதனால் கொந்தளித்த ரசிகர்கள் பதவி விலக வேண்டுமென எதிர்ப்பு தெரிவித்த போதிலும் எதுவுமே செய்யாத தேர்வுக்குழு கூலாக மீண்டும் அவரை கேப்டனாக அறிவித்துள்ளது.

Ashwin

இந்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தோல்வியை சந்தித்ததற்கான எந்த கேள்வியையும் கேட்காமல் ரோகித் சர்மா மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். குறிப்பாக உண்மையாகவே இந்தியா மீது தேர்வுக்குழு அக்கறை கொண்டிருந்தால் அஸ்வின் ஏன் நீக்கப்பட்டார்? ஏன் முதலில் பேட்டிங் செய்யவில்லை? என்பது போன்ற நியாயமான கேள்விகளை அவரிடம் கேட்டிருக்க வேண்டும் என்று கவாஸ்கர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

ஆனால் அதை செய்யாத தேர்வும்குழு இப்போதெல்லாம் தோற்றாலும் கேப்டன் நிரந்தரமானவர் என்ற நிலைமையை கடைப்பிடித்து வருவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தோல்வியை சந்தித்த பின் வேறு கேப்டனை நியமிக்கலாமா என்பது பற்றிய விவாதத்தை நீங்கள் நடத்தினீர்களா? எங்களது காலத்தில் கேப்டன் நியமிக்கப்படும் போது தேர்வுக்குழு மீட்டிங் வெளிப்படையாக நடக்கும். மேலும் தோல்வியை சந்தித்தால் அடுத்த 2 நாட்களில் எதனால் தோற்றோம்? வெற்றி பெறுவதற்கு என்ன தேவை? என்பதை பற்றி தேர்வுக் குழுவிடம் கேப்டன் விளக்க வேண்டும்”

Gavaskar

“ஆனால் அந்த நடைமுறை தற்போது காணாமல் போய்விட்டது. மாறாக ஒரு முறை நீங்கள் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால் எத்தனை தொடர்களில் தோற்றாலும் மாற்றம் செய்வதில்லை. குறிப்பாக அணியின் வெற்றியை விட உங்களுடைய சொந்த செயல்பாடுகள் சிறப்பாக இருந்தால் நீங்கள் தொடர்ந்து கேப்டனாக இருக்கிறீர்கள்”

இதையும் படிங்க:இந்திய அணியில் வேர்ல்டுகப் ஜெயிக்கனும்னா அந்த மாதிரி 2 பேட்ஸ்மேன்கள் வேனும் – ரவி சாஸ்திரி கருத்து

ஒருவேளை தற்போது ஒரு வலுவான தேர்வுக்குழு தலைவர் இருந்தால் அவர் ஏன் அஸ்வின் நீக்கப்பட்டார்? முதலில் ஏன் பேட்டிங் செய்யவில்லை? டிராவிஸ் ஹெட் களத்தில் இருந்த போது ஏன் ஷார்ட் பிட்ச் யுக்தியை கையாளவில்லை? என்பது போன்ற முக்கிய கேள்விகளை கேப்டனிடம் கேட்டிருப்பார். மேலும் நீங்கள் அந்த கேள்வியை கேட்ட பின்பு மீண்டும் அவரை கேப்டனாக நியமிக்கலாம். இதற்காக நான் யாரையும் பதவி நீக்கம் செய்யுமாறு கேட்கவில்லை. மாறாக தோல்விக்கான காரணத்தை பற்றி கேட்க வேண்டும் என்று சொல்கிறேன்” என கூறினார்.

Advertisement