இந்திய அணியில் வேர்ல்டுகப் ஜெயிக்கனும்னா அந்த மாதிரி 2 பேட்ஸ்மேன்கள் வேனும் – ரவி சாஸ்திரி கருத்து

Ravi-Shastri
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை நாளை மறுநாள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் உலகக் கோப்பை தொடருக்கான 100 நாட்கள் கவுண்டவுனை துவக்கி வைக்கவும் பிசிசிஐ ஏற்பாடு செய்து வருகிறது.

Rohit Kuldeep Yadav Virat Kohli KL Rahul India

- Advertisement -

அந்த வகையில் விரைவில் அறிவிக்கப்படவுள்ள இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் தேர்வு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்த உலகக் கோப்பையை வெல்வதற்கு இந்திய அணிக்கு வாய்ப்புகள் அதிகம்.

Ishan Kishan 1

ஆனால் இந்திய அணியின் தற்போதைய பேட்ஸ்மேன்கள் வரிசையில் சரியான சமநிலையை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் டாப் 6 வீரர்களில் இரண்டு இடதுகை ஆட்டக்காரர்கள் இருந்தால் சரியான பேலன்ஸை அணிக்கு கொண்டு வர முடியும்.

- Advertisement -

எனவே இஷான் கிஷன், ஜெய்ஸ்வால் அல்லது திலக் வர்மா ஆகிய வீரர்களில் இருவரை மிடில் ஆர்டரில் கொண்டு வரலாம். இவர்கள் அனைவருமே சீனியர் வீரர்களின் இடத்தை நிரப்பும் திறன் உடையவர்கள்.

இதையும் படிங்க : சர்ப்ராஸ் கானை புறக்கணித்து ருதுராஜ், ஜெய்ஸ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்? உண்மையை விளக்கிய பிசிசிஐ நிர்வாகி

இந்திய அணியின் டாப் டரில் கட்டாயம் இரண்டு இடது கை ஆட்டக்காரர்கள் இல்லை என்றால் உலககோப்பை தொடரில் அது இந்திய அணி சிக்கலை ஏற்படுத்தும் என ரவி சாஸ்திரி எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement