CSK vs MI : லெஜெண்டை பாத்த நாங்க அவருக்கு மரியாதை கொடுக்க மாட்டோம் – இளம் சிஎஸ்கே பவுலரை எச்சரித்த இஷான் கிசான்

Ishan Kishan
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் மே 6ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு சேப்பாக்கத்தில் நடைபெறும் 49வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. அதிக கோப்பைகளை வென்று ஐபிஎல் வரலாற்றின் டாப் 2 வெற்றிகரமான அணிகளாக திகழும் இவ்விரு அணிகளும் கடந்த வருடம் புள்ளி பட்டியலில் கடைசி 2 பிடித்து அவமானத்தை சந்தித்தன. அதனால் இம்முறை கம்பேக் கொடுத்து கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் விளையாடி வரும் அந்த அணிகளில் தோனி தலைமையிலான சென்னை இதுவரை பங்கேற்ற 10 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 3வது இடத்தில் உள்ளது.

Malinga

- Advertisement -

மறுபுறம் கடந்த வருடம் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்த மும்பை இம்முறை சுமாரான துவக்கத்தை பெற்றாலும் சமீபத்திய அடுத்தடுத்த 2 போட்டிகளில் 200+ ரன்களை தொடர்ச்சியாக சேசிங் செய்த முதல் அணியாக சாதனை படைத்து 9 போட்டிகளில் 5 வெற்றிகளை பதிவு செய்து 6வது இடத்தில் உள்ளது. எனவே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல இந்த போட்டியில் வெற்றி பெறுவது இரு அணிகளுக்குமே அவசியமாகிறது. அத்துடன் ஐபிஎல் வரலாற்றின் பரம எதிரிகளாக கருதப்படும் இவ்விரு அணிகளும் ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் என்பதால் இப்போட்டிக்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.

மரியாதை கிடையாது:
முன்னதாக இந்த வருடம் ரன்களை வாரி வழங்கும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மத்தியில் இலங்கையைச் சேர்ந்த இளம் வீரர் மதிசா பதிரான மட்டுமே சென்னை ரசிகர்கள் ஆறுதலடையும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக முன்னாள் இலங்கை ஜாம்பவான் லசித் மலிங்கா போல ஸ்லிங்கா ஆக்சனை பயன்படுத்தி பவுலிங் செய்யும் அவர் 140 – 145 கி.மீ வேகத்தில் பந்துகளை வீசி டெத் ஓவர்களில் எதிரணிகளை அச்சுறுத்துபவராக தோனியின் பாராட்டுகளைப் பெற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

Pathirana-and-Dhoni

ஆனால் மும்பை அணியில் 10 வருடங்களுக்கு மேல் விளையாடி ஒன்றுக்கும் மேற்பட்ட கோப்பைகளை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய ஜாம்பவான் லசித் மலிங்காவையே வலைப்பயிற்சிகளில் எதிர்கொண்ட தாங்கள் பதிரனாவை கண்டு பயப்படப்போவதில்லை என்று தொடக்க வீரர் இசான் கிசான் கூறியுள்ளார். அதாவது ஸ்லிங்கா பந்து வீச்சின் ஒரிஜினல் ஜாம்பவானையே எதிர்கொண்ட தாங்கள் பதிரானாவுக்கு எந்த மரியாதையும் கொடுக்காமல் வழக்கம் போல அடிப்போம் என்று எச்சரிக்கும் அவர் இது பற்றி போட்டிக்கு முன் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இப்போது அதிகப்படியான டெக்னாலஜி மற்றும் எதிரணியினரின் பலத்தை விளக்கும் வீடியோக்கள் இருப்பதாக நினைக்கிறேன். எனவே அவற்றைப் பார்த்து புதிய பந்தில் அவர் எப்படி செயல்படுகிறார் என்பதை கவனித்து அதற்கேற்றார் போல் நாங்கள் செயல்படுவோம். அத்துடன் எங்களுடைய கவனம் முழுவதும் ஒரு பவுலர் மீது கிடையாது. அதே சமயம் நாங்கள் அவருக்கு அதிகப்படியான மரியாதையும் கொடுக்க முடியாது. ஒருவேளை அவர் சிறப்பாக பந்து வீசினால் நாங்கள் மதிப்போம். ஆனால் நேர்மறையான அணுகு முறையுடன் இருக்கும் நாங்கள் அவர் தவற விட்டால் நிச்சயமாக அடித்து நொறுக்குவோம்”

Ishan Kishan

“அது தான் எங்களுடைய அணுகு முறையாகும். அதை விட நாங்கள் மும்பை அணியில் மலிங்காவை வலை பயிற்சியில் எதிர்கொண்ட அனுபவத்தை கொண்டிருப்பதால் மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருக்கிறோம். அவர் ஜாம்பவான் பவுலர். அவர் எங்களது அணியில் பந்து வீசும் போது நாங்கள் சிறப்பாக பயிற்சிகளை எடுத்துள்ளோம். எனவே பந்து எங்கே வருகிறது என்பதை மட்டும் பார்த்து நாங்கள் விளையாடப் போகிறோம்”

இதையும் படிங்க:GT vs RR : குஜராத் அணிக்கெதிரான இந்த தோல்விக்கு நாங்க செய்ஞ்ச இந்த தப்புதான் காரணம் – சஞ்சு சாம்சன் வெளிப்படை

“மாறாக பவுலர் யார் என்பதையும் அவர் எவ்வாறு பந்து வீசுகிறார் அவருடைய பலம் என்ன என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்பட போவதில்லை. எனவே எங்களுடைய கவனம் முழுவதையும் அவரது பந்து வீச்சில் எப்படி அதிக ரன்களை அடிக்கலாம் என்பதில் உள்ளது” என்று கூறினார். இதனால் இப்போட்டியில் இந்த இருவர் மோதுவதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement