GT vs RR : குஜராத் அணிக்கெதிரான இந்த தோல்விக்கு நாங்க செய்ஞ்ச இந்த தப்புதான் காரணம் – சஞ்சு சாம்சன் வெளிப்படை

Sanju-Samson
- Advertisement -

ஜெய்ப்பூர் நகரில் நேற்று நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 48-வது லீக் ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணியானது 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்கள் மட்டுமே குவித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக 30 ரன்கள் அடித்தாரே தவிர மற்ற எந்த ஒரு வீரரும் 20 ரன்களை கூட அடிக்கவில்லை.

Saha

- Advertisement -

இதன் காரணமாக ராஜஸ்தான் அணி மிகப்பெரிய சரிவை கண்டது. குஜராத் அணி சார்பாக ரஷீத் கான் மூன்று விக்கெட்டுகளையும், நூர் முகமது இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி ராஜஸ்தான் அணியை முற்றிலுமாக வளைத்து போட்டனர். அதன் பின்னர் 119 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது ரன் ரேட்டை கணக்கில் வைத்து துவக்கத்திலிருந்து அதிரடியாக விளையாடியது.

குறிப்பாக புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அவர்கள் நல்ல ரன் ரேட் வைத்திருந்தால் அவர்களுக்கான பிளே ஆஃப் வாய்ப்பு அதிகரிக்கும் என்பதனால் இந்த போட்டியில் 13.5 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 119 ரன்கள் குவித்து ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பெற்றுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளதோடு நல்ல ரன் ரேட்டிலும் முன்னிலை வைக்கின்றனர்.

Rashid Khan

இந்நிலையில் குஜராத் அணிக்கு எதிராக அடைந்த இந்த தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில் : இந்த இரவு எங்களுக்கு மிகவும் கடினமான ஒரு இரவாக மாறியுள்ளது. இந்த போட்டியில் நாங்கள் பவர்பிளேவின் போது நன்றாக துவங்கவில்லை அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து விட்டோம்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக ஸ்பின்னர்களுக்கு எதிராக மிகவும் தடுமாற்றத்துடன் விளையாடிய நாங்கள் அவர்களது லைன் மற்றும் லென்த்தை கணிக்காமல் முக்கியமான கட்டத்தில் மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து முமென்டத்தை இழந்து விட்டோம். அதன் காரணமாக எங்களால் அதிக ரன்களை குவிக்க முடியாமல் போனது. இது போன்ற போட்டிகளில் செய்யும் தவறுகளை நாம் சரி செய்து கொண்டு ரன்களை குவிக்க வேண்டியது அவசியம்.

இதையும் படிங்க : ODI WC : இந்தியா பாகிஸ்தான் உலககோப்பை போட்டி நடைபெறும் மைதானம் எது தெரியுமா? – நடந்தா நல்லாதான் இருக்கும்

அடுத்து வரும் இரண்டு போட்டிகள் எங்களுக்கு மிகவும் முக்கியமான போட்டிகளாக மாறியுள்ளன. நிச்சயம் அந்த போட்டிகளில் வெற்றி பெற்று மீண்டும் இந்த தொடரில் பலமாக திரும்புவோம் என சஞ்சு சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement