ODI WC : இந்தியா பாகிஸ்தான் உலககோப்பை போட்டி நடைபெறும் மைதானம் எது தெரியுமா? – நடந்தா நல்லாதான் இருக்கும்

Babar Azam Rohit Sharma IND vs PAK
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் 50 ஓவர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரானது வரும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள வேளையில் இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கின்றன. இதில் குரூப் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளோடு ஒரு போட்டியில் விளையாட வேண்டும். அதன் பின்னர் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அதனை தொடர்ந்து இந்த உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியானது அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

VIrat Kohli IND vs PAK

- Advertisement -

இந்த உலகக் கோப்பை தொடருக்காக இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நேரடியாக இந்த தொடருக்கு தகுதி பெற்றுள்ள வேளையில் எஞ்சிய அணிகள் தகுதி சுற்று போட்டிகளின் மூலம் இந்த தொடரில் பங்கேற்கும். இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி எப்படி நடைபெறும்? எங்கு நடைபெறும்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் குரூப் சுற்றில் விளையாடவுள்ள போட்டிகளின் அட்டவணை தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியானது உலகின் மிகப்பெரிய மைதானமாக பார்க்கப்படும் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

INDvsPAK-1

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் தற்போது அட்டவணைப்படி நரேந்திர மோடி மைதானத்திலேயே இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக பாகிஸ்தானில் ஆசிய கோப்பை தொடரானது நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

- Advertisement -

அந்த தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்பது உறுதியாகியுள்ள வேளையில் இந்தியா அணி பாகிஸ்தானுக்கு வந்தால் மட்டுமே தாங்கள் இந்தியாவில் வந்து ஒருநாள் உலக கோப்பையில் பங்கேற்போம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் கூறியுள்ளதால் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டி நடைபெறுமா? நடைபெறாதா? என்பது அனைவரது மத்தியிலும் பேசப்படும் விடயமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : GT vs RR : அவங்க 2 பேருக்கும் எந்த அட்வைஸ்சும் தரமாட்டேன். அவங்களே பாத்துப்பாங்க – வெற்றிக்கு பிறகு பாண்டியா பேட்டி

கடந்த பல ஆண்டுகளாகவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறாமல் இருந்து வரும் வேளையில் இந்திய மண்ணில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தால் நன்றாகத்தான் இருக்கும் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement