- Advertisement -
ஐ.பி.எல்

ஏன் முடியாது? டேல் ஸ்டெயின் சொன்னதை எங்களால் செய்ய முடியும்.. மும்பை அணியை எச்சரித்த – இஷான் கிஷன்

நடப்பு 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரானது ஆரம்பித்ததில் இருந்தே அனைத்து அணிகளும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் நிச்சயம் இந்த சீசனில் ஒருமுறையாவது ஏதாவது ஒரு அணி 300 ரன்கள் தொடக்கூடும் என்று ஏற்கனவே பலராலும் பேசப்பட்டது. அந்த வகையில் இந்த தொடரின் முதல் போட்டியிலேயே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஐதராபாத் அணி 286 ரன்கள் குவித்து வெற்றியும் பெற்றிருந்தது.

எங்களால் நிச்சயம் எதையும் சாதிக்க முடியும் – இஷான் கிஷன்

ஆனால் அதற்கடுத்த நான்கு போட்டிகளில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹைதராபாத் அணி தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வந்தது. பின்னர் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது 243 ரன்கள் சேசிங் செய்து அசாத்தியமான வெற்றியை பெற்று இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

மொத்தமாக இதுவரை இந்த தொடரில் 6 போட்டியில் விளையாடியுள்ள அந்த அணி 2 வெற்றிகளுடன் தற்போது புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் சன்ரைசர்ஸ் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான 33-வது லீக் போட்டி மும்பை நகரில் ஏப்ரல் 17-ஆம் தேதி இன்று நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடயிருக்கும் நட்சத்திர வீரரான இஷான் கிஷனின் செயல்பாடு எவ்வாறு இருக்கும்? என்று பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த ஆண்டு மும்பை அணியில் இருந்து காட்டிவிடப்பட்ட பின்னர் தற்போது அவர் மும்பை அணிக்கு எதிராக விளையாட இருப்பதால் அவர் எவ்வாறு விளையாடப்போகிறார்? என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

- Advertisement -

ஏற்கனவே இந்த தொடர் ஆரம்பித்தபோது ஏப்ரல் 17-ஆம் தேதி மும்பை அணிக்கு எதிராக ஹைதராபாத் அணி 300 ரன்களை அடிக்கும் என்று முன்னாள் வீரரான டேல் ஸ்டெயின் கூறியிருந்தார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த இஷான் கிஷன் கூறுகையில் : இரண்டாவதாக பேட்டிங் செய்தால் நமக்கு டார்கெட் என்பது என்ன என்று தெரிய வந்துவிடும். அதனால் அதனை செய்ய முடியாது.

இதையும் படிங்க : இப்போ தெரியுதா? இதுக்குதான் மிட்சல் ஸ்டார்க்க்கு கோடிகளில் சம்பளம் தராங்க – டேல் ஸ்டெயின் புகழாரம்

ஆனால் முதலில் பேட்டிங் செய்யும்போது முதல் 6 ஓவர்கள் எப்படி விளையாடுகிறோமோ அதை வைத்து பின்னர் மைதானத்திற்கு ஏற்றார் போல் விளையாடினால் அவர் சொன்ன மாதிரி 300 என்களை ஏன் எடுக்க முடியாது. நிச்சயம் எடுக்க முடியும் என்று மும்பை அணியை எச்சரிக்கும் வகையில் இஷான் கிஷன் பேசியுள்ளார். இந்த தொடரின் முதல் போட்டியில் சதம் அடித்த அவர் அதன்பிறகு தொடர்ச்சியாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -