இப்போ தெரியுதா? இதுக்குதான் மிட்சல் ஸ்டார்க்க்கு கோடிகளில் சம்பளம் தராங்க – டேல் ஸ்டெயின் புகழாரம்

Dale Steyn
- Advertisement -

டெல்லி அருண் ஜேட்லி கிரிக்கெட் மைதானத்தில் ஏப்ரல் 16ஆம் தேதி நேற்று நடைபெற்ற 32-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய டெல்லி அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை குவித்தது. பின்னர் 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சரியாக 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை குவிக்கவே இந்த போட்டி “டை”-யில் முடிவடைந்தது.

மிட்சல் ஸ்டார்க் கொடுக்கும் தொகை எதுக்குன்னு இப்போ புரியுதா? – டேல் ஸ்டெயின்

அதன்பிறகு சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11 ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்ததாக விளையாடிய டெல்லி அணி 4 பந்துகளில் 13 ரன்கள் அடித்து அசத்தலான வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியே எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஏனெனில் 189 ரன்கள் என்கிற இலக்கினை துரத்திய போது ராஜஸ்தான் அணிக்கு கடைசி ஓவரில் 6 பந்துகளில் வெறும் 9 ரன்கள் மட்டும் தான் தேவை என்கிற நிலை இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்சல் ஸ்டார்க் தான் வீசிய 20-ஆவது ஓவரில் 6 பந்துகளில் 8 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்ததால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.

அதேபோன்று சூப்பர் ஓவரிலும் ரியான் பராக் மற்றும் ஹெட்மயர் ஆகியோருக்கு எதிராக மிகச் சிறப்பாக பந்துவீசிய ஸ்டார்க் வெறும் 11 மட்டுமே விட்டுக் கொடுத்தார். இப்படி அவரது சிறப்பான பந்துவீச்சே டெல்லி அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. அதனால் அவருக்கு இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அதோடு அவரது இந்த செயல்பாட்டுக்கு பலரது மத்தியில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் அவரது இந்த சிறப்பான செயல்பாட்டை பாராட்டி சமூக வலைதளத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ள முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின் “இதுபோன்ற செயல்பாடுகளுக்காக தான் இவருக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக வழங்கப்படுகிறது” என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவுக்கு காரணம் யாதெனில் : கடந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் 2 கோடி ரூபாய் அடிப்படை விலைக்கு ஏலத்தில் பங்கேற்ற ஸ்டாக்கை 11.75 கோடி என்கிற மிகப்பெரிய தொகைக்கு டெல்லி அணி ஏலத்தில் எடுத்திருந்தது.

இதையும் படிங்க : முதல் ராஜஸ்தான் வீரராகவும், இரண்டாவது கேப்டனாகவும் சஞ்சு சாம்சன் நிகழ்த்திய – துரதிஷ்டவசமான சாதனை

கடந்த 2024 ஆண்டு மிகப்பெரிய தொகைக்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்ட அவர் எதிர்பார்த்த அளவிற்கு தனது செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை. அதனால் அவருக்கு ஏன் இவ்வளவு தொகையை டெல்லி கொடுக்க வேண்டும் என்ற பேச்சுக்கள் சமூகவலைதளத்தில் அதிகளவில் இருந்தன. இந்நிலையில் அதற்கெல்லாம் பதில் கொடுக்கும் விதமாகத்தான் டேல் ஸ்டெயின் இந்த பதிவை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement