முதல் ராஜஸ்தான் வீரராகவும், இரண்டாவது கேப்டனாகவும் சஞ்சு சாம்சன் நிகழ்த்திய – துரதிஷ்டவசமான சாதனை

Sanju
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் போட்டியானது நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ர் அணியும், அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

சஞ்சு சாம்சன் நிகழ்த்திய துரதிஷ்டவசமான சாதனை :

அதனை தொடர்ந்து முதலில் விளையாட்டிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சரியாக 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவிக்கவே போட்டி சூப்பர் ஓவர்வரை சென்றது.

- Advertisement -

பின்னர் சூப்பர் ஓவரில் விளையாடிய ராஜஸ்தான் அணி 11 ரன்களுக்கு ஆல் அவுட்டாக அடுத்ததாக விளையாடிய டெல்லி அணி 4 பந்தில் 13 ரன்கள் குவித்து அச்சத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த போட்டியின் போது டெல்லி அணி நிர்ணயித்த 189 ரன்களை இலக்கினை துரத்திய ராஜஸ்தான் அணி சார்பாக துவக்க வீரராக களமிறங்கி விளையாடிய சஞ்சு சாம்சன் 19 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 31 ரன்கள் எடுத்து அதிரடி காட்டியிருந்த வேளையில் ரிட்டயர்டு ஹர்ட் மூலம் மைதானத்திலிருந்து வெளியேறிந்தார்.

பின்னர் அவர் மீண்டும் பேட்டிங் செய்யவே வரவில்லை. அந்தவகையில் இந்த போட்டியின் ஆறாவது ஓவரை விப்ராஜ் நிகம் வீசும்போது அவருக்கு இடுப்பு பகுதியில் ஏற்பட்ட தசைப் பிடிப்பு காரணமாக கடுமையான வலி ஏற்பட்டது. இதனால் அவதிப்பட்ட அவர் தொடர்ச்சியாக பேட்டிங் செய்ய முடியாமல் பாதியிலேயே மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

- Advertisement -

இதன் மூலம் சஞ்சு சாம்சன் ஐ.பி.எல் வரலாற்றில் ஒரு துரதிஷ்டவசமான சாதனைக்கு ஆளாகியுள்ளார். அந்தவகையில் அவர் நிகழ்த்திய துரதிஷ்டவசமான சாதனை யாதெனில் : 18 ஆண்டுகால ஐ.பி.எல் வரலாற்றில் எந்தவொரு ராஜஸ்தான் வீரரும் ரிட்டயர்டு ஹர்ட்டாகி வெளியேறியதில்லை. எனவே ராஜஸ்தான் அணி சார்பாக ரிட்டயர்டு ஹர்ட் மூலம் வெளியேறிய முதல் வீரர் என்கிற சாதனை நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : அசிஸ்டன்ட் கோச் அபிஷேக் நாயரை நீக்க பி.சி.சி.ஐ திட்டம்.. மேலும் சில நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் – என்ன நடந்தது?

அதுமட்டுமின்றி ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியின் கேப்டனாக ரிட்டயர்டு ஹர்ட் மூலம் வெளியேறும் இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் சஞ்சு சாம்சன் நிகழ்த்தியுள்ளார். இவருக்கு முன்னதாக க்ருனால் பாண்டியா கேப்டனாக இருந்தபோது ரிட்டயர்டு ஹர்ட்டாகி வெளியேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement